ஒருபோதும் இல்லாத அளவு அதிக தொற்றுக்களை பதிவு செய்த பிரித்தானியா

17

ஒருபோதும் இல்லாத அளவு அதிக தொற்றுக்களை பதிவு செய்த பிரித்தானியா.கடந்த 24 மணித்தியாளத்தில் 35,928 தொற்றுக்கள் பதிவாகியது.

பிரித்தானிய அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 326 பேர் கொரோனா தொற்றின் காரணமாக பலியாகியுள்ளனர்.இதன் காரணமாக மொத்த கோவிட் உயிர்ப்புகளின் எண்ணிக்கை 67,075 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி 76,287 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் உயிரிழந்தது கோவிட் தொற்றின் காரணமாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை பிரித்தானியா மேலும் 35,928 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 2,040,147 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில் ஆரம்பித்ததில் இருந்து அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட
அதிக தொற்றுகள் இவையாகும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை டிசம்பர் 16 கிடைத்த தகவலின் படி புதிதாக தினமும் சராசரியாக 2,034 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை டிசம்பர் 17 ஆம் திகதி மொத்தம் 18,771 பேர் கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.டிசம்பர் 18ஆம் திகதியில் 1,364 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

-ஈழம் ரஞ்சன்-