ஒரு உயிரின் இறுதி வலி இப்படித்தான் இருக்கும்!

63

அறுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று
நூறு முறையாவது கத்தியை வைத்து வைத்து
வலிக்குமென்று அழுதிருப்பார்கள்.
தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு முன்பு கூட
யாராவது வந்து காப்பாற்றி விடுவார்களென்று
நம்பியே விழுங்கியிருப்பார்கள்.

தூக்குக் கயிறை மாட்டிக் கொள்ளும் முன்
பத்து முறையாவது கழுத்தில்
மாட்டி மாட்டியேனும் கழற்றியிருப்பார்கள் .
உயரத்தில் இருந்து குதிக்கும் முன்பே
வலியே இல்லாமல் செத்து விட வேண்டுமென்று
வேண்டிக் கொண்டிருப்பார்கள் .

தண்ணீரில் மூழ்கிச் சாகும் இரண்டு நொடிகளாவது
மூச்சு விட வேண்டுமென்று வெளியேறத் துடித்திருப்பார்கள்.

ஓடும் ரயிலில் விழுந்தே ஆக வேண்டுமென்று
நினைத்தவர்கள் கூடக் கண்களை
இறுக மூடிக்கொண்டு தன்னை
மாய்த்துக் கொண்டவர்கள் தான்.
கோழைகள் தான் தற்கொலை செய்வார்களாம்
யார் சொன்னது, முதுகில் குத்து பட்டுச் சாவதை விடவும்
நெஞ்சில் குத்து பட்டுச் சாவதற்கு தான் துணிச்சல் தேவை.

இந்த நிமிடமே எல்லாவற்றிலும் இருந்து
தன்னை விடுவித்துக் கொள்ளத்தான்
அதி தைரியம் வேண்டும்.
பிடித்தவர்களை பிரிந்து போகவும்
மறக்கவே முடியாதென மண்டியிட்டுக் கிடத்தவர்களையும்
சட்டெனத் தூக்கியெறிந்து விட்டுப்போக
அந்த உயிர் பலமுறை பரிசீலித்து இருக்கும்.

தன்மீது கருணை காட்டும் படி
அழுதிருக்கும், அடம் பிடித்திருக்கும்
கெஞ்சியும் இருக்கும், மிரட்டியும் இருக்கும்
காதலே இல்லாவிட்டாலும் கருணையை எதிர்பார்த்திருக்கும்.

இப்படித்தான் எதையாவது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்
என்று கடந்துச் சென்று விடாதீர்கள்.
எழுதிக் கொண்டிருப்பது உங்களுக்காகவோ,
உலகை விட்டுச் செல்வதற்காகவோ இருக்கலாம்.

உயிராய் நினைத்ததையெல்லாம்
உதறித் தள்ளி விட்டு போகிறார்களென்றால்
உபயோகமற்ற ஒன்றாய் தன்னை
தூக்கியெறிந்ததன் பெருங்கோபம் அது.

தனியாக விட்டால் சரியாகிவிடுமென்று
ஒதுங்கி நின்று விடவேண்டாம்.
தனிமையை விரும்பிக் கொண்டிருப்பவர்கள் தான்
தற்கொலையின் ஆரம்ப நிலையில்
அடியெடுத்து வைத்தவர்களாய் இருப்பார்கள்.

அழுது கொண்டேயிருப்பவர்களுக்கு
அழ வேண்டுமென்று ஆசையல்ல,
அதைத் துடைப்பதற்கு
யாரும் இல்லையென்பது தான் நிஜம்.

ஒருவேளை தற்கொலை வலித்திருந்தால் மன்னித்து விடுங்கள்
ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எல்லோருக்கும் ஏற்றதாகவே இருக்கிறது

எழுத்துருவாக்கம் திருமதி கல்கி