ஒஸ்லோ மாநாடும் விடுதலை போரும்

51

தமிழீழ விடுதளைப் போரைச் சிதைத்த சர்வதேச வலைப்பின்னல் குறித்த தெளிவையும், “ஒஸ்லோ மாநாடு” பற்றியும் நாம் அவசியம் அறிந்திருக்கவேண்டும்.

சிறிலங்காவில் 05.09.2002 அன்று அன்றைய பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பன விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கிறார். சிறிலங்காவே தடையை நீக்கியபிறகு கூட உலகநாடுகள் சில தடையை நீக்காதது குறித்து தலைவரின் கவனத்திற்குச் செல்கையில்; எம்மை அழிப்பதற்கான சர்வதேச வலைப்பின்னல் இது என்பது அவருக்கு உறுதிபடத் தெரிகிறது.கீழ்வரும் சதிவலைப்பின்னலின் நிகழ்ச்சிநிரல், தமிழரது பலத்தைக் களைவதற்காகத் (ஆயுதக்களைவு) திட்டமிட்டுப் பின்னப்பட்டதை பின்வரும் நிகழ்வுகளூடாக நாம் இலகுவாக அறிந்துகொள்ளலாம்.

16.09.2002 பாங்கொக் இல் முதற்சுற்றுப்பேச்சு நிறைவுற்று, தமிழ்மக்களின் மனிதாபிமானப் பணிகளுக்கான NERF (வட.கிழ. மறுவாழ்வு நிதி) அமைப்பு உருவாக்கப்படுகிறது.

25.11.2002 உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டில் 7 கோடி அமெரிக்க டொலர்கள் வட.கிழ. மறுவாழ்வு நிதிக்குத்தருவதாக உறுதியளித்துவிட்டு, அமெரிக்காவின் உதவி இராசாங்க அமைச்சர் ரிச்சார்ட் ஆமிட்ரேஜ் பின்வருமாறு உரையாற்றுகிறார்..
“பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிடுவதாக ஒரு பகிரங்கப் பிரகடனத்தைச் செய்யுமாறு விடுதலைப்புலிகளை நாம் வேண்டிக்கொள்கிறோம். அத்தோடு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப்போராட்டத்தையும் கைவிடுகிறோம் என சிறிலங்கா மக்களுக்கும் (?!) சர்வதேசத்திற்கும் விடுதலைப்புலிகள் எடுத்துக்காட்டவேண்டும்..”
(தீர்வு இன்றி ஆயுதங்களை நாம் ஏன் கைவிடவேண்டும்..?!)

02.12.2002 Oslo வில் நடந்த மூன்றாவது சுற்றுப்பேச்சில் கனேடிய கூட்டாட்சி மன்றமும் கலந்துகொண்டது. ஆயுதக்களைவு பற்றி இங்கேயும் பேசப்பட்டது.
(தீர்வு இன்றி ஆயுதங்களை நாம் ஏன் கைவிடவேண்டும்..? )

06.01.2003 தாய்லாந்து பேச்சுவார்த்தையில் மீண்டும் ஆயுதக்களைவு பற்றிப் பேசப்படுகிறது.
(தீர்வு இன்றி ஆயுதங்களை நாம் ஏன் கைவிடவேண்டும்..?)

இந்திய இராணுவ நிபுணர் சதீஷ் நம்பியார் இதற்கான பிரச்சனைகளுக்குத் தீர்வு வகுப்பதாக அரசு தரப்பு அறிவிக்க, தமிழர்தரப்பு நிராகரித்தது.
ஆனால் உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுதை உடனடியாகச் செயற்படுத்தும்படி தமிழர்தரப்பு கேட்டுக்கொண்டதை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழர்தரப்பின் ஆயுதக்களைவை மீண்டும் வலியுறுத்துகிறது.
(தீர்வு இன்றி ஆயுதங்களை நாம் ஏன் கைவிடவேண்டும்..?)

07.08.2003 இல் யேர்மனி பேர்லினில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது நெடுந்தீவிற்கு அருகில் புலிகளின் படகிலிருந்தவர்களைக் கைதுசெய்யமுற்படுகையில், போ.நி.க.குழுவிற்கு அறிவித்தும் பலனின்றிப் போகவே தம்மைத்தாமே ஆகுதியாக்குகிறார்கள் 3 கடற்புலிகள்.

அவ்வாறே 10.03.2003 இல் திருகோணமலைக்கு 220 கடல்மைல் தொலைவில் சர்வதேசக்கடலில் சென்றுகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் வர்த்தகக் கப்பலொன்றை சிறிலங்கா அரசு தாக்கியழித்தது, இதிலும் பதினொரு கடற்புலிகள் வீரச்சாவடைகிறார்கள்,..(இவ்விடயம் நடந்து மூன்று நாட்களில் நோர்வேயின் விடார் கெல்கிசன் குழுவினர் விடுதலைப்புலிகளின் நாடித்துடிப்பையறிய கிளிநொச்சி வருகிறார்கள்)

இந்நிகழ்வுகளின் பின்பும் தமிழர்தரப்பு இறுதிவரை புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறாது அமைதியைக் கடைப்பிடித்து வந்தது.

ஆனால் 2003 இல் யப்பானில் நடைபெறுவதாக இருந்த உதவிவழங்கும் நாடுகளின் கூட்டத்தை Washington இற்கு மாற்றியபின், அந்நிகழ்விற்கு தமிழர் தரப்பு அழைக்கப்படாதது பற்றி கேட்கப்பட்டபோது மீண்டும் அதே பதிலை ரிச்சார்ட் ஆர்மிட்ரேஜ் கூறியிருந்தார்.

” தனியரசை அமைப்பதற்கான ஆயுதப்போராட்டத்தையும் கைவிடுகிறோம் என சிறிலங்கா மக்களுக்கும் (?!) சர்வதேசத்திற்கும் விடுதலைப்புலிகள் எடுத்துக்காட்டவேண்டும்..”

ஆக; எமது ஆயுதங்களும், நிழல்அரசுமே இவர்களுக்கு நீண்டகாலத் தலைவலியாக இருந்திருக்கிறது. நாம் அழிக்கப்பட்டதற்கான அடிப்படையும் அதுவேதான் .

-தேவன்