ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் ஈழத்து பெண் மஹேஷி ராமசாமி.

20

உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது.இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் மஹேஷி என்.ராமசாமி உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த அவர் பிரித்தானியாவில் வைத்தியராக கல்வியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வின் பிரதான ஆய்வாளராக உலகம் முழுவதும் அவர் பிரபலமடைந்துள்ளார்.அந்த தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ வேலை தொடர்பில் ” The Lancet” என்ற சஞ்சிகையில் பதிவிடப்படும் அறிக்கையில் முதன்மை இடம் ஒன்று பேராசிரியர் மஹேஷி ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், க்ரைஸ்ட் வித்தியாலயத்தின் வைத்தியம் தொடர்பான பட்டம் பெற்றுள்ள அவர் தொற்று நோய் தொடர்பில் ஒக்ஸ்போர்ட் மற்றும் லண்டன் வைத்திய நிறுவனத்தில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றும் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் NHS அறக்கட்டளையில் பணியாற்றுகிறார்.
அதற்கமைய அவர் மேகன் மருத்துவ கல்லூரியின் பிரதான பேராசிரயராகவும் பணியாற்றி வருகின்றார்.அவர் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் முன்னணி ஆராய்ச்சியாளராக உள்ளார் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விருது பெற்ற மூத்த மருத்துவ விரிவுரையாளராகவும் உள்ளார்.பேராசிரியர் மஹேஷி என். ராமசாமியின் பெற்றோரும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகும். அவரது தாயார் பேராசிரியர் சமரநாயக்க ராமசாமி என்பவராகும் கொழும்பின் விசாகா கல்லூரியின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றாராகவும். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொதுநலவாய உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் ஆனார்.

மஹேஷி என். ராமசாமியின் தந்தை ரஞ்சன் ராமசாமியும் ஒரு விஞ்ஞானியாகும்.
மூன்று பிள்ளைகளின் தாயான மஹேஷி ராமசாமி, ஒக்ஸ்போர்ட் கொவிட் -19 தடுப்பூசி ஆய்வில் இணைந்துள்ளமை குறித்தும் அவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றமையும் இலங்கையர்கள் அனைவரும் மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

(எனது சொந்தக்காரர் என்பதில் எனக்குப் பெருமை)

News by eelamranjan