ஈழத் தமிழர்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவாதத்தை கக்கிய, இப்போது ‘பல்லு பிடுங்கப்பட்ட பாம்பாக’ அடங்கி ஒடுங்கி இருக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி….
புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இறுதிக் கட்டப் போர் நடந்து கொண்டிருந்த & புலிகள் தோற்கடிக்கப்பட்டு அடுத்த சில ஆண்டுகளை (2005 – 2018)
உள்ளடக்கிய காலப் பகுதிகள் அவை….
இலங்கை முஸ்லிம்களின் தலைவராக விளங்கிய அஸ்ரப் இன் மறைவை அடுத்து, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மிதவாத & இனவாத முஸ்லிம் தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது….
அந்த வெற்றிடத்தை நிரப்பி, ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் ஆகும் நோக்கத்தோடு, காய்களை நகர்த்துகிறார் ஒருவர்….
ஆரம்பத்தில் இலங்கையின் வடக்கு மன்னார் மாவட்டத்தை மட்டும் மையப்படுத்தி இருந்த அவரது அரசியல் செயற்பாடுகள், இலங்கை முஸ்லிம்களின் தலைமைப் பதவியை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசையால் – ஏனைய இடங்களில் அந்தந்த கட்சித் தலமைகளால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொண்டு, இலங்கையில் பெயர் சொல்லக் கூடிய & மூன்று தொடக்கம் ஐந்து வரையான நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறக் கூடியவராக மாறுகிறார் திருவாளர் ரிஷாத் பதியுதீன்…
அந்தக் காலகட்டங்களில் தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஹ ஜனாதிபதியாக விளங்குகிறார்…
அவரது சகோதரர் பஸில் ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்டிப் படைப்பவராகவும் முக்கிய அமைச்சுப் பதவிகளை கொண்டவராகவும் விளங்குகிறார்….
இவர்கள் இருவரையும் தனது கைக்குள் போட்டுக் கொண்ட ரிஷாத் பதியுதீன் – தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்…
மூன்று தொடக்கம் ஐந்து வரையான பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, ஒரு அமைச்சர் & பிரதியமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு – ராஜபக்ஷ சகோதரர்களின் செல்லப் பிள்ளையாகி, தான் நினைத்தது எல்லாவற்றையுமே நடத்த ஆரம்பித்தார் ரிஷாட்….
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ அல்லது பேராசைகளோ ஒருவருக்கு இருப்பது தவறு இல்லை….
ஆனால், அதையே தனிப்பட்ட ஒருவரது சுயநலத்திற்காக அடுத்தவர்கள் மீது திணிப்பது தவறு…
அதுவும், இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இன்னுமொரு இனத்தின் மீது திணிப்பது மகா தவறு….
காலங்கள் கடக்கின்றன….
பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள்…
தமிழர்களது இராணுவ & பேரம் பேசும் சக்தி இல்லாமல் போகிறது….
பல ஆண்டுகளாக நடந்த, தமிழர்களுக்கு எதிரான இலங்கை சோனக முஸ்லிம்களின் துரோகத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் இல்லாத சூழலில்… தமிழர்கள் இன்னுமொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களை, அரசியல் ரீதியாக ஒன்றுசேர்ந்து – சிங்கள பௌத்த பேரினவாதகளுக்கு எதிராக போராட வருமாறு பகிரங்கமாக அழைக்கிறார்கள்….
அதற்கு முன்னேற்பாடாக, தமிழ் பேசும் அதாவது தமிழர்களின் பாரம்பரிய இடங்களாகிய (இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டபடி) இலங்கையின் வடக்கு & கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் & முஸ்லிம்கள் ஒன்றிணைந்து – சிங்கள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்…..
முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவர் கனவோடு இருந்த ரிஷாத் இதை கடுமையாக எதிர்க்கிறார்….
‘வடக்கு கிழக்கை ஒருபோதும் இணைக்க விடமாடமாட்டோம்’ என பகிரங்கமாக இனத்துவேசம் பேசுகிறார்….
மறுபுறத்தில் காடுகளை அழித்து அதிலே முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்ய முயற்சிக்கிறார்….
இதில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்ட காடுகளை அழித்து அதிலே முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்ய ரிஷாத் எடுத்த முயற்சிக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து அதை முறியடிக்கிறார்கள்…
ஆனால், தப்பியோடிப் போய் திரும்பி வந்த ரிஷாத் ஆதரவாளர்கள், அநியாயமாக அந்தக் காடுகளில் ஒரு பகுதிக்கு தீ வைத்து அழிக்கிறார்கள்…
இதே போல, ரிஷாத் இனது மாவட்ட எல்லைப்புறங்களில் இருந்து யுத்த காலங்களில் வெளியேறிய முஸ்லிம்களை ‘வில்பத்து’ எனும் காட்டுப் பகுதியில் – ராஜபஹ்ஷ சகோதரர்களின் ஆசிர்வாதத்தோடு குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்….
காலங்கள் உருண்டோடி, அரசாங்கங்கள் மாறி, எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்க – அதிலும் இணைந்து அமைச்சராகிறார்….
தமிழர்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை தொடர்கிறார்…
தனக்கு ஏற்றவாறு சென்றுகொண்டிருந்த ரிஷாத் இன் நிலை, கடந்த ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தேவாலய மனிதப் படுகொலைகளுடன் மாறிப் போகிறது…..
இலங்கை முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக மட்டும் பாவித்துக் கொண்டிருந்த சிங்களம், முஸ்லிம்களுக்கு எதிராக திரும்புகிறது….
முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், வழிபாட்டு இடங்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றது….
முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதிலிருந்து தப்பவில்லை… குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய முஸ்லிம் அரசியல்வதிகளை, சிங்கள இனவாதிகள் குறிவைத்து தாக்க ஆரம்பித்தார்கள்…
ரிஷாத் பதியுதீனும் அவர்களின் இலக்குகளில் ஒன்றாக மாறினார்…
ரிஷாத் இன் செய்கைகள் எல்லாம் இனவாத கண்ணோடு நோக்கப்பட்டன….
முஸ்லிம்களை மீள்குடியேற்றிய அவரது நடவடிக்கைகள் ‘காடழிப்புகள்.. / இயற்கை வளங்களை அழித்தல்’ என சிங்கள இனவாதிகளால் பிரசாரம் செய்யப்பட்டது…
பயங்கரவாதிகளுடன் ரிஷாத் இற்கு தொடர்பு இருப்பதாக சிங்கள அரசியல்வாதிகள் குற்றம் சாட்டினார்கள்….
அவரது அமைச்சு வாகனங்களில் பயங்கரவாதிகள் சென்றுவந்ததாக புரளிகளை கிளப்பினார்கள்…
இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் ரிஷாத்
உட்பட இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்கள்….
அவர்களுக்கு சிங்கள பௌத்த இனவாதிகளிடத்தில் ஆதரவும் பெருக ஆரம்பித்தது….
பதறிப் போன ரிஷாத் ‘தனக்கும் பயங்கரவாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று அறிக்கை மேல் அறிக்கைகள் விட்டார்….
நேரடியாக police தலைமையகம் போய் ‘விசாரணை செய்து குற்றமிழைத்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்’ என்று அழாத குறையாக கெஞ்சினார்…
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் பதவி விலக மாட்டேன் என்று சொன்னவர், தாமாகவே முன்வந்து பதவி விலகினார்….
அப்பிடி இருந்தும் சிங்களம் மசியவில்லை….
அவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது….
திரும்பத் திரும்ப வாக்குமூலம் கொடுக்க police தலமையகம் அழைக்கப்பட்டார்….
மூன்று police விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன…
அவரது மனைவி, தம்பி & தங்கை மீதும் விசாரணைகள் பாய்ந்தன…
ரிஷாத் உண்மையிலேயே குற்றமற்றவர் தான்…
Police விசாரணைகளில் அவை தெரியவந்தன…
அத்தோடு, குற்றம் சாட்டியவர்களால்… ரிஷாத் பயங்கரவாதிகளுக்கு தெரிந்து கொண்டே ஆதரவளித்ததார் என்பதற்கான எந்தவொரு உறுதியான சான்றுகளையும் முன்வைக்க முடியவில்லை….
ஆனால், முஸ்லிம் வெறுப்புகளை வாக்குகளாக மாற்றும் நோக்கத்தோடு, சிங்களம் தொடர்ந்தும் ரிஷாத் மீது குற்றம் சாட்டுகிறது…
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ரிஷாத் இன் தம்பி கைது செய்யப்பட்டிருக்கிறார்….
ரிஷாத் பதியுதீனை செல்லப் பிள்ளையாக நடாத்திய ராஜபக்ஷ சகோதரர்களே, சிங்கள வாக்குகளுக்காகஅவரை கைவிட்டு விட்டார்கள்….
ராஜபக்ஷ இன் அரசியல் வாரிசு & பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ‘ரிஷாத் இன் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை…. எதிர்க்கட்சியில் அமர வேண்டி வந்தாலும் கூட, ரிஷாத் இன் ஆதரவை கோர மாட்டோம்’ என பகிரங்கமாக அறிக்கை விட்டுவிட்டார்….
புலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் சித்தரித்து வந்த ரிஷாத் இப்போது ‘முஸ்லிம்களின் மீது அடக்குமுறையை திணித்து அவர்களை தமிழர்களை போல போராட வைக்க வேண்டாம்’ என சிங்களவர்களுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்….
சுத்த தமிழில் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறார்…
ஆனால் – கட்டப்பொம்மன் சிவாஜி மாதிரி குரலை உயர்த்தி இனவாதம் பேசிய ரிஷாத் பதியுதீன், இப்போது வடிவேல் அடிவாங்கும் முன்பு பேசுவது மாதிரி குரலை இறக்கி பேசுவதைக் கண்டும், கேட்டும் தமிழர்கள் ஒரு ஏளனச் சிரிப்போடு அவரைக் கடந்து & புறக்கணித்துச் செல்கிறார்கள்….
ரிஷாத் ‘ஆடிய ஆட்டங்கள்’ தமிழர் மனங்களில் மட்டுமல்ல….
ரிஷாத் இன் மனதிலும் வந்து போகும்…!!!