பைஸர் பயோன்டெக் கொவிட் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கான தயார்படுத்தலில் பிரித்தானியா.

27

பைஸர் – பயோன்டெக் தடுப்பு மருந்தை பயன்டுத்தும் முதலாவது நாடான பிரித்தானியா தேவையான அனைத்து தயார்ப்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

மருத்துவர்களில் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் வைத்தியசாலைகளுக்கு தடுப்பு மருந்தை முதலில் விநியோகிக்க உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

முதல் தொகுதி செவ்வாய் அன்று பயன்பாட்டுக்கு வரும் என்பதுடன் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னிலை சுகாதார ஊழியர்கள் மற்றும் முதியோர் காப்பகங்களில் உள்ள முதியோர் உட்பட ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பைஸர் மற்றும் பயோன்டெக் கொவிட் தடுப்பு மருந்துக்கான அவசர கால
பயன்பட்டிற்கான அனுமதியை பிரித்தானியா கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

பிரித்தானியா 67 மில்லியன் சனத்தொகையை கொண்ட நாட்டில் 20 மில்லியன் மக்களுக்கு போதுமான 40 மில்லியன் தடுப்பு மருந்தை கொள்வனவு செய்கின்றது.

முதல் வாரத்தில் சுமார் எட்டு இலட்சம் தடுப்பு மருந்து டோஸ்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

New by -eelamranjan-