பாகிஸ்தானின் அதிரடி; திணறும் இரசிகர்கள்…

109

உலகப் புகழ்பெற்ற சமூக ஊடகமான TikTok செயலி பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தைத் தடுப்பதற்குத் தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தவறான வீடியோக்கள் டிக்டாக் செயலியில் ஷேர் செய்யப்படுவதாக அரசுக்கு பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன.. அதைத்தொடர்ந்து தொலைத்தொடர்புத்துறை டிக்டாக் செயலியை தடை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக டிக்டாக் நிர்வாகம் பதில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சட்டத்திற்குப் புறம்பான, அநாகரிகமான வீடியோ பதிவுகளை முறைப்படுத்துமாறு டிக்டாக் நிர்வாகத்தை பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.