பக்தி, கடவுள் நம்பிக்கை இவற்றுக்கு அப்பால் கோயில்கள் தமிழர் தம் வாழ்வியலோடு மிக நெருக்கமானவை.

8

ஒரு கோயில் அந்த கோயிலுக்கு அருகில் அல்லது அதனுடன் இணைந்தவாறு ஓர் குளமோ அல்லது கிணறோ இருக்கும். அதனால் அதனை சுற்றியே மக்களின் மனைகள் அல்லது வீடுகள் உருவாக்கப்படும்.

ஏன்..?

பாசனத்துக்கு தேவையான நீரை பெறவும் – நாளாந்த தேவைக்கான நீரை பெறவும் மக்கள் கோயில்களில் தங்கியிருந்தனர். இதனால் அதனை கண்காணிக்கவும் – பராமரிக்கவும் – வருடந்தோறும் தூர் வாரவும் கோயிலே ஏற்பாடு செய்யும்.

கோயில்களே நூலகங்கள். கோயில்களே கல்விக்கூடங்கள். கோயில்களே அரசனின் சட்டங்கள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள். கிராம நிர்வாக கூட்டங்களும் – மக்கள் சந்திப்பும் அங்கேயே நடைபெறும்.

இது போக கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் இல்லயா..? அது இல்லாதோர்க்கானது. வறுமைப்பட்டோர்க்கானது. அதனாலேயே வறுமையானோர் அதிகமாக கோயில்களை சுற்றியிருப்பர். [பிச்சைக்காரர்கள் என்று இன்று அவர்களைத்தான் கோயில்களுக்குள் நாம் அனுமதிப்பது இல்லையே.)

கோயில்களே சந்தைகள். கோயில்களே வங்கிகள். தானியங்கள் சேமித்து வைக்கும் தானிய வங்கிகள் அவை. தானியங்களை மட்டுமல்ல உணவுப் பண்டங்கள் கூட கோயில்களில் சேமிக்கப்பட்டன.

கோயில்களே இல்லாதோரை ஏற்றுக்கொண்ட ஆதுலர் சாலைகள். கோயில்களே நம் பழம்பெருமையான மருத்துவமனைகள். கோயில்களை நம் வரலாறுகளை பாதுகாத்த நூதனசாலைகள். அங்குள்ள ஓவியங்களும் சிற்பங்களுமே நம் வாழ்வியலை பிரதிபலித்தன – ஆவணப்படுத்தின. இயல் – இசை – நாடகம் என கலைகளை வளர்த்த கலைக்கூடங்கள் கோயில்களே.

இதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என பாடினார்கள். 😇

என்று இந்த சாதிய கட்டமைப்பும் – நம்முள் பெரியவர் – சிறியவர் ஏற்றத்தாழ்வுகளும் பார்க்க தொடங்கினோமோ அன்று இந்த கோயில் கட்டமைப்புக்கள் உடைந்து கோயில்கள் செய்த சமூகப்பணிகளும் இல்லாது போய் தம் வரலாறுகளௌ தொலூத்து இன்று ஆடம்பரங்களின் அடையாளமாக மட்டுமே காட்சியளிக்கின்றன பல கோயில்கள்.

ஆனால் இன்றும் சில கோயில்கள் மக்களுக்காக இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. நாம் உருவான நோக்கத்தை மறக்காமல். ❣️