மீண்டும் முகமாலை முன்னரங்க பகுதியில் எச்சங்கள்!

73

முகமாலை முன்னரங்க பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீண்டும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே யுத்த கால எச்சங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.