பானர்ஜியும் பழனிசாமியும்…

218

“மேற்குவங்க மாநிலத்தை வங்காளிகள்தான் ஆள்வார்கள். குஜராத்திகள் அல்ல” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அவருக்கு எமது பாராட்டுகள். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இதைக் கூறியதற்காக மம்தா பானர்ஜியை யாரும் “இனவாதி” என்று கூறவில்லை.ஆனால் தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்று கூறினால் உடனே இந்து ராம் முதல் துக்ளக் குருமூர்த்திவரை துள்ளிக் குதிப்பார்கள்.

மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆளவேண்டும் என்று கூறினால் இவர்கள் பொத்திக்கொண்டு மௌனமாக இருப்பார்கள்.அதுவும் இங்குள்ள கம்யுனிஸ்டுகள் உடனே “இனவாதிகள்” என்று முத்திரை குத்திவிடுவார்கள்.அதுமட்டுமல்ல இன்னும் ஒருபடி மேலேபோய் “யார் தமிழர்கள்?” என்பதற்கு வரைவிலக்கணம் என்ன என்று நக்கலாக கேட்பார்கள்.

ஆனால் வங்காளிக்கு என்ன வரைவிலக்கணம் என்று மம்தா பானர்ஜிடம் இந்த கம்யுனிஸ்டுகள் கேட்க மாட்டார்கள்.மம்தா பானர்ஜி ஒரு பெண் முதலமைச்சர். இருந்தும் அவர் எவ்வளவு தைரியமாக மோடி அரசுக்கு சவால் விடுக்கிறார்.

தமிழ்நாட்டிலும் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அவர் ஒரு ஆண் முதலமைச்சர் மட்டுமல்ல தமிழ் முதலமைச்சர் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் என்னே கேவலம்? ஏழுபேர் விடுதலை குறித்து அனுப்பிய தீர்மானம் குறித்து முடிவு எடுக்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தக்ககூட முடியாமல் இருக்கிறார்.

உயர்நீதிமன்றம் இது குறித்து ஆளுநரைக் கண்டித்த பின்பும்கூட தமிழக முதலமைச்சரால் ஆளுநரிடம் கோர முடியாத அளவிற்கு துணிவு இன்றி இருக்கிறார்.

டயர்நக்கி அரசு இது!

தோழர் பாலன்