பாரீஸ் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள புதிய நடைமுறைகள்!

782

இன்று பகல் பாரிஸ் பொலீஸ் தலைமையகத்தில் தலைமைப் பொலீஸ் அதிகாரி Didier Lallement நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நகர மேயர் ஆன் கிடல்கோவும் பங்குகொண்டார். பாரிஸ் பிராந்தியத்தில் அமுலுக்கு வரும் புதிய சுகாதார நடைமுறைகள் அங்கு வைத்தே அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை வருமாறு :

அருந்தகங்கள், விளையாட்டு மண்டபங்கள், நீச்சல் தடாகங்கள், நடன மண்டபங்கள், சிறுவர் விளையாட்டு மண்டபங்கள் (bars, gymnases, piscines, salles de danse, salles de jeux) ஆகியன மூடப்பட்டிருக்கும்.

திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும்.

மாணவர் ஒன்றுகூடல்கள், களியாட்டங்கள் தடைசெய்யப்படுகின்றன.

பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் வகுப்பறைகள், விரிவுரை மண்டபங்களில் மாணவரது எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கப்படும்.

பாரிஸ் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள் (centres commerciaux) நான்கு சதுர மீற்றர்களுக்கு(4 mètres carrés) ஒருவர் என்ற எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.