பாரிஸில் பெரும் பதற்றம்! அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்

16

பாரிஸில் யார் உயிரை காப்பாற்ற வேண்டும்.. யாரை இறக்க விட வேண்டும் என தேர்வு செய்யக்கூடிய நிலை! மருத்துவர்கள் எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மருத்துவமனைகளின் நிலை விரைவில் நெருக்கடிக்குள்ளாகும், எந்த நோயாளியை காப்பாற்றுவது என தேர்வு செய்யக்கூடிய நிலை மருத்துவர்களுக்கு ஏற்படும் என மருத்துவர்கள் குழுவாக ஜனாதிபதிக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்.

பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் கிட்டதட்ட 4,800 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவாகும், அதேசமயம், மோசமான நிலை இனி தான் வரப்போகிறது என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

பாரிஸில் பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களின் போது கூட இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் சந்தித்ததில்லை.

இந்த மாதம் பாரிஸ் உட்பட சில பகுதிகளில் மென்மையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தியதே இந்த மோசமான நிலைக்கு ஒரு காரணம்.

எதிர்வரும் வாரங்களில் பாரிஸில் உள்ள மருத்துவமனைகள் நெருக்கடிக்குள்ளாகும் என எங்களுக்கு எற்கனவே தெரியும். முடிந்தவரை பல உயிர்களை காப்பாற்ற, எந்த நோயாளியை காப்பாற்றுவது என சோதனை மேற்கொண்டு முன்னுரிமை அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இப்படி தேர்வு செய்யும் நடைமுறை, குறிப்பாக தீவிர சிசிச்சை தேவைப்படும் முதியவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நோயாளிகள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவை சேர்ந்த 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய மோசமான சுழல் எந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேர்வு செய்யக்கூடிய நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.

ஐசியூ-வில் ஒரு படுக்கை மட்டுமே காலியாக இருந்து, அப்போது இரண்டு நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால், யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்ககூடாது என முடிவெடுக்க நிலை ஏற்படும்.

அனுமதிக்கப்படும் நோயாளி உயிர் பிழைக்கலாம், அனுமதிக்கப்படாதவர் அநேகமாக இறக்கலாம். இந்த நிலையை நோக்கி தான் நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம்.

யாரை காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான முடிவை எடுக்கும் நிலைக்கு மருத்துவர்களை ஆழ்த்தியதாக பிரான்ஸ் அரசு மீது மருத்துவர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது..