பாரீஸ் மருத்துவமனை தலைவா் எச்சரிக்கை

85

10 நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கிட்டத்தட்ட நிரம்பிவிடும்: பாரீஸ் மருத்துவமனை தலைவர் எச்சரிக்கை!

பாரீஸ் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அடுத்த வாரம் கொரோனா நோயாளிகளால் கிட்டத்தட்ட நிரம்பிவிடும் என மருத்துவமனைகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அது தவிர்க்க இயலாதது என்று கூறிய பாரீஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலுள்ள 39 மருத்துவமனைகளின் தலைவரான Martin Hirsch, அக்டோபர் 24 குறைந்தது 800 முதல் 1,000 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார்.

ஏற்கனவே இன்று (14/10/2020 புதன்) இரவு கட்டுப்பாடுகள் தொடர்பில் தொலைக்காட்சியில் நேரலையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிக்க உள்ள நிலையில், இந்த செய்தி மேலும் அவருக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவரது அறிவிப்பில் பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பும் இருக்கலாம் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்னமும் அதிக அளவில் வீட்டிலிருந்தே வேலை செய்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய புதிய நடவடிக்கைகள் எடுக்க Martin Hirsch கோரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள், நான், என நாம் அனைவருமே சமூக தொடர்புகளை இன்னமும் 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்துக்கொள்ளவேண்டியுள்ளது என்கிறார் அவர்.