பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர் அத்துடன் பல உடமைகளும் சேதமாகி உள்ளன
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இத் தீவிபத்து இடம்பெற்றுள்ளது அதிகாலை இரண்டு மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
20 ஆம் வட்டாரத்தின் rue de Lagny வீதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் தீ பரவியுள்ளது.
இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
60 தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.