போராளிகளின் தடை நீக்கப்படுமா.?
அதற்கு என்ன செய்யவேண்டும்.
பதில் கூறுங்கள் மக்களே.!
2009 இல் எமது ஆயுதங்களை மௌனித்தோம்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது கிளைக் கட்டமைப்பிடம்
போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் பாரிய பொறுப்பை ஒப்படைத்தோம்.
சிலவருட சிறைவாழ்க்கையை முடித்துக்கொண்டு தாயகத்தைவிட்டு வெளியேறினோம்.
இங்கே எமது கிளைக்கட்டமைப்புகள்
தமக்குள் ஏற்பட்ட குரோதங்களால் எம்மை தமது தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கினர்.
தம்மை பெரும் தேசியவீரர்களாக வாய்ச்சவடால்விட்டு தமது தேசிய விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகுமாறு எம்மை நிர்ப்பந்தித்தனர்.
மறுத்தால் அல்லது தம்மை எதிர்த்தால் பிரான்ஸ் காவல்த்துறைக்கு எம்மைப்பற்றி பொய்க்குற்றச்சாட்டுகளை முறையிடப்போவதாக தெரிவித்தனர்.
சிலபோராளிகள் அவர்களின் வலையில் விழுந்து வெளிவரமுடியாமல் எமக்கெதிரான வசைபாடல்களுக்கு துணைபோயினர்.
சுவிசிலும் இதுவே நிலைமை.
பல மூத்தபோராளிகள்,இளநிலைத் தளபதிகள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவருகின்றபோதும் அவர்களால் இயக்கத்தின் தேவைக்கும் வளர்ச்சிக்கும் என இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கிளைக் கட்டமைப்புகளுக்குள் பொறுப்புநிலைகளில் நின்று அதனை வழிநடத்தமுடியாத துர்ப்பாக்கியநிலையே காணப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து இன்று 11 ஆண்டுகள் ஆகியும் புலம்பெயர் நாடுகளில் போராளிகளின் செயற்பாடுகளுக்கு கிளைக்கட்டமைப்புகள் தடைவிதித்து அதனை மீறிச் செயற்பட்டால் எம்மை துரோகிகளாக சித்தரிப்பதாலேயே இன்றுவரை தேசியவிடுதலைப்போராட்டம் முடக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளது.
பிரான்சில் மகேஸ்/மேத்தாவும்,
லண்டனில் கமலும்,சுவிசில் ரகுபதியும்,ஜேர்மனில் சிறிரவியும்,
நோர்வேயில் முரளியும் என பல கோமாக்காரர்களே இந்த முடக்கத்திற்கான மூலகாரணம்.
இப்பொழுது மக்களாகிய உங்களிடமே இதற்கான பதிலை விட்டுவிடுகிறோம்.
இவர்களை என்ன செய்யலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்.
கடுப்புடன்…..
-சினைப்பர்-
https://m.facebook.com/story.php?story_fbid=161763298949410&id=100053472219030