பெரியாரின் கேள்வியும் – முத்துராமலிங்கத்தேவரின் சிறப்பான பதில்களும்

153

1..கடவுள் இல்லை என்பதை ஏன் மறுக்கிறீர்கள் என்று பெரியார் கேட்க அதற்கு முத்துராமலிங்கரின் பதில்..

கடவுள் இருக்கிறார் என்ற பயத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்கிறோம்..உண்மையும்,நேர்மையும் இருக்கிறதென்றால்..கடவுளும் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்..

2..கல்லைபோய் கடவுள் என்று வழிபடுகிறாயே என்று பெரியார் கேட்டதற்கு தேவரின் பதில்..

எங்கு பார்த்தாலும் கல்லாய் தான் தெரிகிறது..என்னை சுற்றிலும் கற்கள் தான் நிறைந்துள்ளது..ஆனாலும் நான் எல்லாக் கல்லையும் வழிபடுவதில்லையே..

3..எதாவது ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும்.எதற்கு இத்தனை தெய்வங்கள்..?என்றுப் பெரியார் கேட்டதற்கு..தேவரின் பதில்..

நான் என் அப்பாவையும் தெய்வமாகத்தான் பார்க்கிறேன்..என் தாத்தாவையும்..தெய்வமாகத்தான் பார்க்கிறேன்..என் தாத்தாவின் தாத்தாவையும் தெய்வமாகத்தான் பார்க்கிறேன்..

நான் என் அம்மாவையும் தெய்வமாகத்தான் நினைக்கிறேன்..என் அம்மாவின் அம்மாவையும் தெய்வமாகத்தான் நினைக்கிறேன்..எனக்கே இத்தனைத் தெய்வங்கள் இருக்கும்போது,என் இனத்திற்கு ஏன் இத்தனைத் தெய்வங்கள் இருக்ககூடாது. என்று திருப்பிக்கேட்டவர் ஐயா முத்துராமலிங்கர்..அப்பேற்பட்ட முத்துராமலிங்கத்தேவர் எந்தவிதத்திலும்,சாதிய சிந்தனைவாதியல்ல.அவரும் சரி அவர் குடும்பத்தாரும் சரி ஆன்மீக சிந்தனைவாதிகள்..

கோவிலின் உள்ளே அனுமதிக்கபடாமல் இருந்த மக்களை எல்லாம்..கோவிலின் உள்ளே அழைத்து சென்றவர் இந்த முத்துராமலிங்கர்..தன் சொத்துக்களை எல்லாம் தன் தோட்டத்தில் வேலை பார்த்த அனைத்து சமுதாய மக்களுக்கும் எழுதி வைத்தவர் இந்த முத்துராமலிங்கர்..

தமிழ்நாடேக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மாமனிதரை சாதிசங்கத் தலைவரை போல் சித்தரித்துக் காட்டி மக்களிடமிருந்து அவர் கருத்துலகத்தை ஓரங்கட்டி சமூகத்தை முட்டாளாக்கி வாழ்வது இந்த திராவிடக் கட்சிகள் தான்..

Radhy Mohan