Pilot vs Gehlot
கடந்த ஒரு வாரமாகவே இந்திய அரசியலில் பேசு பொருள் இது தான்..
சரி நம்ம ஒரு குட்டி கதை பாப்போம்..
ஒரு ஊர்ல ஒரு election நடந்துச்சாம். அதுக்கு 2 நாளைக்கு முன்னால பக்கத்து ஊர்லயும் ஒரு election நடந்துச்சு.
நம்ம பக்கத்து ஊரு election ல முனுசாமி னு ஒருத்தன் இருந்தான். அவன் தான் election க்கு எல்லா வேலையும் பாத்தான். அவனோட உழைப்பினால அந்த ஊர்ல அவன் இருந்த கட்சி நல்லா பெருசா ஜெயிச்சிருச்சு.
முனுசாமியோட திறமையும், அவன் கட்சி க்கு செஞ்ச உழைப்பையும் பாராட்டி கடைசில அவனுக்கே அந்த ஊர் தலைவர் பொறுப்ப அந்த கட்சி பெரியவங்க கொடுத்தாங்க..
பக்கத்து ஊர்ல election முடிஞ்சு போய் இப்போ இந்த ஊர்ல election நடக்குது. அந்த ஊர்லயும் முனுசாமி மாதிரியே ராமசாமி னு ஒரு கட்சிகாரன் இருந்தான். அவனும் அதே மாதிரி நல்லா கட்சிக்கு வேல செஞ்சான். கடசியில அந்த கட்சியையும் ஜெயிக்க வச்சான்.
ஆனா பக்கத்து ஊர்ல முனுசாமிய அந்த ஊர் தலைவர் ஆக்குன கட்சி இப்போ ராமசாமிய தலைவர் ஆக்குல. அதுக்கு பதிலா அந்த ஊர்லயே அந்த கட்சிய சேர்ந்த ஒரு வயசான ஆள தலைவரா அறிவிச்சாங்க. ராமசாமிய துணை தலைவரா அறிவிச்சாங்க.
ராமசாமி க்கு செம்ம கோவம்…
“என்னடா இது.. கட்சிகாக அத்தனை நாள் உழைச்சோம்.. நம்மலால தான் கட்சியே ஜெயிச்சிது. ஆனா நமக்கு தலைவர் சீட்ட கொடுக்காம, எவனோ சும்மா இருந்த ஒரு பெருசுக்கு கொடுத்துட்டாங்களே ” னு பொலம்பிட்டு இருந்தான்.
இதனால அவன் கட்சில அவன் முன்ன இருந்த மாதிரி வேல பாக்கல. ரொம்பவே அசால்டா இருந்தான்.
கடசில அந்த ஊர்ல உள்ள மொத்த கட்சிகாரங்களையும் ஒன்னா கூப்டு ஆலோசனை நடத்த திட்டம் போட்டாரு அந்த ஊர் தலைவரு. அதுக்கும் ராமசாமி வராம, கடசியில ஊர் மக்கள்ட்ட தலைவரோட குறைய பத்தி பேச ஆரமிச்சிட்டான் ராமசாமி..
இப்போ தலைவரு ராமசாமிய கூப்டு சமாதானம் பேசுவாரா?
இல்ல ராமசாமிய கட்சிகாரங்களே கூப்டு சமாதானம் பேசுவாங்களா?
இல்ல ராமசாமி அவனோட ஆளுங்களோட போய் எதிர்கட்சில இனைஞ்சிருவாரா?
இல்ல தனி கட்சி ஆரமிப்பாரா?
இந்த ராமசாமி கதை தான், இப்போ ராஜஸ்தான் கதை.
நம்ம கதையில பாத்த ராமசாமி தான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான Sachin Pilot.
அந்த பெருசு தான் இப்போ ராஜஸ்தானின் முதல்வராக உள்ள Ashok Gehlot.
இப்போ கட்சியில் இருந்து விலகி நிற்கும் Pilot இடம் 30 MLA கள் இருப்பதாக ஒரு கருத்து வருது.
அதே சமயம் CM Ashok Gehlot வசம் 103 MLA கள் இருப்பதாகவும் கெலாட் சொல்றாரு.
இவங்க இரண்டு பேரு மோதல்னால ராஜஸ்தான் அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இத பத்தி நாம மேல படிக்கிற முன்னாடி Anti Sedition Law னா என்னானு பாத்துட்டு வந்துருவோம்.
1980 ல ராஜிவ் காந்தி 10 வது schedule ah இந்திய அரசியலமைப்பில் ஒரு schedule ல சேக்குறாரு. அது தான் Anti defection law.
இந்த Anti defection law என்ன சொல்லுதுனா.
1. Volunteera ஒரு கட்சியின் MLA, MLC, MP போன்ற பதவிகளிலிருந்து விலகுவது.
2. தன்னுடைய கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள்.
அதாவது ஒரு Bill ah பாஸ் பன்னும்போது தன் கட்சிக்கு எதிரா வாக்களிப்பது போன்ற செயல்களில் ஒரு MLA வோ, MP யோ ஈடுபட்டால் அவங்கள தகுதி நீக்கம் செய்ய Speaker க்கு முழு அதிகாரம் உண்டு.
ஆனா இதே ஒரு ஆளு கட்சிக்கு எதிரா செயல்பட்டா தடை செய்யுவாங்க.. பாதி பேரு கட்சிக்கு எதிரா நின்னா…?
இதுக்கு தான் இந்த Anti defection law ல ஒரு விலக்கு அளிக்கிறாங்க.
அதாவது 2/3rd of the members கட்சிய விட்டு விலகினா, அவங்கள disqualification செய்ய முடியாது. மாறாக ஆட்சி கலைக்கப்பட்டு அந்த மாநிலத்திற்கே மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
இந்த வகையில இப்போ பைலட் தன் கட்சிக்கு எதிரா போர் கொடி உயர்த்தியுள்ளார்.
இதனால மீண்டும் சட்டசபை கூடும் போது இவரை தகுதி நீக்கம் செய்ய Speaker க்கு முழு அதிகாரம் உண்டு.
அப்படி தகுதி நீக்கம் செய்தால் இவரு ஆதரவு MLA கள் உள்ள இடத்தில் மீண்டுமொரு தேர்தல் வைக்கப்படலாம்.
அல்லது, தன் பெரும்பான்மையை நிரூப்பித்தால் ராஜஸ்தானில் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நிகழவும் வாய்ப்புள்ளது.
பைலட் காங்கிரஸின் ஒரு முக்கிய இளம்வயது தலைவர் ஆவார். இவரும் ராகுல் காந்தி யும் கிட்டத்தட்ட ஒரே வயதில் அரசியல் களம் புகுந்தவர்கள்.
பைலடோட தந்தை ராஜேஷ் பைலட் டில்லியில் பால் வித்து, Air force ல Join பன்னி பைலட் ஆகி படிப்படியாக அரசியல்ல வளந்தவரு. அதனால தான் இவரு பேரோட தன்னோட சாதி குடும்ப பெயர நீக்கி பைலட்னே சேர்த்து கொண்டாரு. அதுவே சச்சின் பைலட் னு அவரோட பையனுக்கும் தொடருது.
ஆரம்பத்தில அரசியல்ல விருப்பம் காட்டாத சச்சின் பைலட் Air Force இல் நுழைவதேயே லட்சியாமாக வச்சிருந்தாரு. ஆனா பார்வை குறைபாடு காரணமாக இவரால அங்க போக முடியல. அதனால கொஞ்சம் காலம் BBC தொலைக்காட்சியில பணி புரிந்தாரு. அதன்பின்னே Genral Motors இல் 2 ஆண்டு வேலை செஞ்சாரு. 2000 ல தன் தந்தை சாலை விபத்தில பலியாக, 2004 இல் நடந்த தேர்தல்ல போட்டிபோட்டு சட்டசபையில 25 வயசிலேயே நுழையிறாரு பைலட்.
சின்ன வயசிலேயே அரசியல் களம் இறங்கிய பைலட்க்கு, அந்த இளம் வயதிலேயே பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாரு. 2014 லயே ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க பைலட், 2018 சட்டமன்ற தேர்தலுகாக உழைச்சு, கட்சிய ஜெயிக்கவும் வச்சாரு. ஆனாலும் தனக்கு முதல்வர் பதவி தராம கெலாட் க்கு முதல்வர் பதவி கொடுத்தது தான் இப்போ சச்சின் பிரிந்து வந்து நிற்க காரணம்.
பார்போம்…
சச்சின் பைலட் தன் கொள்கைக்கு துரோகம் செய்யாம புது கட்சி ஆரமிக்கிறாரா…. இல்ல வேறு ஒரு கட்சி கூட வைக்கிறாரானு…
எதுக்கு நேர்மையா இருக்காங்களோ இல்லையோ, இவங்களுக்கு Vote போட்ட மக்களுக்கு நேர்மையா இருந்தா சரி….