பிரித்தானியாவில் வரும் 14 ஆம் திகதி முதல் புதிய சமூக ஒன்றுகூடல் விதிகள்.

99

கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து
பிரித்தானியா முழுவதும் சமூக
ஒன்றுகூடல்கள் குறித்த கடுமையான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று
வெளியிடப்படவுள்ளது.
புதிததாக அதிகரித்துள்ள கொவிட் 19
தொற்றை கட்டுப்படுத்தும் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் முயற்சியின் ஒரு பகுதியாக
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ஆறு பேருக்கு அதிகமானவர்கள் பங்குபற்றும்
சந்திப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை மீறினால் அபராதம்
விதிக்கப்படும் என பிரதமர் போறிஸ்
ஜோன்சன் அறிவிக்கவுள்ளார்.அண்மைய
நாட்களில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக
அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று
பரிசோதனையும் பரந்துபட்ட அளவில்
விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உச்சத்தை
தொட்டிருந்த போது இருந்த நோயாளர்களின்எண்ணிக்கையை விட தற்போது குறைந்தளவானவர்களே வைத்தியசாலைகளில்
சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று, கட்டுப்பாட்டை
மீறிச் சென்றுவிடுமோ என அமைச்சர்கள்
அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், புதிய
கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம் என பிரதமர் போறிஸ்
ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில் சமூக தொடர்புகள்
தொடர்பான விதிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் சந்திப்பொன்றில்
குறைந்தது 30 பேர் பங்குபற்றலாம் என்ற
விதிமுறை இருந்த போதிலும் தற்போது
அந்த எண்ணிக்கை
6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமைகொரோனா தொற்று நோயாளர்கள் 2,988 கண்டறியப்பட்ட அதேவேளை, திங்கட்கிழமை 2,948 பேரும் செவ்வாய்கிழமை 2,460 பேரும் தொற்றினால் பீடிக்கப்பட்டமை
உறுதிசெய்யப்பட்டிருந்தது.

NEW LOCKDOWN RULES FOR ENGLAND FROM MONDAY.

Max social gatherings SIX PEOPLE

Applies indoors and outdoors

Applies in private homes

Applies in pubs and restaurants

Does NOT apply to schools or workplaces

Does NOT apply to weddings, funerals, team sport

Does NOT apply if household bubbles are bigger than six people.

Police will be encouraged to break up larger groups and issue £100 fines, which will then double on each repeat offence up to £3,200.

News by eelamranjan