பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவல்

40

பிரித்தானியாவில் கோவிட் தொற்று வீதம் பூட்டுதலின் முடிவிற்கான நம்பிக்கையை தொடர்ந்து குறைத்து வருகிறது. பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை திங்கட்கிழமை நாடு தழுவிய பூட்டுதலில் இருந்து படிப்படியாக விடுபடும் தனது சாலை வரைபடத்தை வெளியிடுவதற்கு இருக்கிறார்.

பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 215 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 120,580 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் 3,414 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 27.4 விகிதம் குறைவாகும்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி பெப்ரவரி 5, 2021 ஆம் திகதிவரை 129,498 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் இறந்ததற்க்கான காரணம் கோவிட் என்று குறிப்பிடுகிறது. பெப்ரவரி 5 திகதி தரவுகளின் படி அதற்கு முந்தய வாரம் 7,820 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள்இறப்புக்கு காரணம் கோவிட்-19 என்று குறிப்பிடப்பட்டுள்ளது-கோவிட்-19 தொற்றி 28 நாட்களுக்கு பின்னர் இறந்தவர்கள்.

இதேவேளை பிரித்தானியா மேலும் 9,834 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 4,115,509 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தோடு ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தொற்றுகள் 16.2 விகிதம் குறைவாகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை 17 பெப்ரவரி 2021 கிடைத்த தகவலின் படி புதிதாகத் தினமும் சராசரியாக 1,397 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளை தொற்று பிரித்தானியவில் ஆரம்பித்ததிருந்து பெப்ரவரி 17, 2021ஆம் திகதி வரை மொத்தம் 432,213 பேர் கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெப்ரவரி 18, 2021 அன்று வெளியிட்ட தகவலின் படி மொத்தம் 18,462 பேர் தற்பொழுது மருத்துவமனையில் கோவிட் தாக்கத்தின் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

பெப்ரவரி 19 ஆம் திகதியில் 2,469 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று
வருகிறார்கள்.பிரித்தனியாவில் பெப்ரவரி 19 2021 ஆம் திகதி கிடைத்த தரவுகளின் படி ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்பும் ஆர் மதிப்பு 0.6 க்கும் 0.9 க்கும் இடையில் உள்ளது.

-ஈழம் ரஞ்சன்-