பிரித்தானியாவில் அதிகரிக்கும் தொற்றுகளும்,இறப்புகளும்.

58

பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி கடந்த 24 மணித்தியாளத்தில் மேலும் 1,041 பேர் கொரோனா தொற்றின் காரணமாக பலியாகியுள்ளனர்.இதன் காரணமாக மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 77,346 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாளத்தில் மேலும் 62,322 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 2,836,801 ஆக உயர்ந்துள்ளது.

-ஈழம் ரஞ்சன்-