பைசரைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்பதல் அளித்துள்ளது.
முன்னதாக கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரிட்டனில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

எனவே, அடுத்தவாரம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டின் துவக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மொத்தம் 100 மில்லியன் டோஸ் வரை தடுப்பூசி மருந்து வழங்க பிரிட்டன் அரசாங்கத்துடன் செய்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முதல் காலாண்டில் மில்லியன் கணக்கான டோஸ் மருந்துகள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி உள்ளது.
இப்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் தடுப்பூசி தயாரிப்பை துரிதப்படுத்த முடியும் என்று பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.

மேலும், வசந்த காலத்தில் நாம் கொரோனா பிடியிலிருந்து வெளியேற முடியும் என்று நம்பிக்கையுடன் இப்போது சொல்லலாம் என மாட் ஹான்காக் கூறினார்.
-ஈழம் ரஞ்சன்-