பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்,ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்.
பிரித்தானிய பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின், அவரது கால்களில் பயங்கர இரத்தக்கொப்புளங்கள் உருவாகியுள்ளன.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்ற இடத்தைச் சேர்ந்த Sarah Beuckmann (34) என்ற பெண்ணுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதும், முதலில் ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உருவாகியுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு, அது சாதாரணமான ஒரு பக்க விளைவுதான், ஆனால் ஒரு வாரம் சென்றதும் Sarahவின் கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு உருவாகியுள்ளது.அதைத் தொடர்ந்து அவரது கணுக்கால் பகுதியில் சிவப்புப் புள்ளிகள் உருவாகியுள்ளன. மருத்துவரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுள்ளார் Sarah, ஆனால், அதற்குள் அவரது காலில் இருந்த சிவப்புப் புள்ளிகள், கொப்புளங்களாக மாறத்துவங்கியுள்ளன.

உடனடியாக Sarah மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தனது கால்கள் இருந்த நிலையைக் கண்டு, கால்களை இழக்க நேருமோ என்ற அச்சம் Sarahவுக்கு உருவாகியுள்ளது.முதலில் கால்களில் தோன்றிய கொப்புளங்கள், பிறகு கைகள், முகம் மற்றும் உட்காரும் இடம் வரை பரவியிருக்கிறது.இந்த நிலையில் Sarahவை இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டாம் என்று கூறிவிட்டார் அவரது மருத்துவர்.
-ஈழம் ரஞ்சன்-