பிரித்தானியாவில் இன்று திங்கட்கிழமை (12) முதல் மீண்டும் முடி வெட்டும் நிலையங்கள்,பப்கள்,உணவகங்கள்,
அத்தியாவசியமற்ற பொருட்களிற்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளது
பிரித்தானிய அரசு நேற்று வெளியிட்ட
தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 7 பேர்
பலியாகியுள்ளனர். இதன் காரணமாக
கொரோனா வைரஸ் தாக்கி 28
நாட்களுக்குள் இறந்தவர்களின் மொத்த
எண்ணிக்கை 127,087 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 7 நாட்களில் 251 பேர் பலியாகி
உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற
வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 2.4 விகிதம் உயர்ந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி மார்ச் 26, 2021 ஆம் திகதிவரை149,968 பேரின் மரணச் சான்றிதழ்களில்
அவர்கள் இறந்ததற்கான காரணம் கோவிட் என்று குறிப்பிடுகிறது. மார்ச் 26 ஆம் திகதி
தரவுகளின் படி அதற்கு முந்தய வாரம் 799
பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள்
இறப்புக்கு காரணம் கோவிட்-19 என்று
குறிப்பிடப்பட்டுள்ளது
கோவிட்-19 தொற்றி 28 நாட்களுக்கு பின்னர் இறந்தவர்கள்.இதேவேளை பிரித்தானியா மேலும் 1,730 தொற்றுக்களை பதிவு
செய்ததன் காரணமாக மொத்த கோவிட்
தொற்றுகளின் எண்ணிக்கை 4,369,775 ஆக உயர்ந்துள்ளது.
சென்ற வாரத்தோடு
ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தொற்றுகள் 32.2 விகிதம் குறைவாகும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை ஏப்ரல் 6, 2021 கிடைத்த தகவலின் படி புதிதாகத் தினமும் சராசரியாக 221 பேர்
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதே வேளை தொற்று பிரித்தானியாவில்
ஆரம்பித்ததிளிருந்து ஏப்ரல் 6,2021ஆம்
திகதி வரை மொத்தம் 459,521 பேர் கோவிட்
தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருக்கிறார்கள்.
ஏப்ரல் 8, 2021 அன்று வெளியிட்ட தகவலின் படி
மொத்தம் 2,862 பேர் தற்பொழுது
மருத்துவமனையில் கோவிட் தாக்கத்தின்
காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஏப்ரல் 9 ஆம் 2021 திகதி 406 பேர்
சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.ஏப்ரல் 10,2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 32,121,353 பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 7,466,540 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 39,587,893 தடுப்பு
மருந்துகள் கொடுக்கப்பட்டுளள்ளது.
பிரித்தானியாவின் சனத்தொகை
2019 இன் மத்தியில்
66.8 மில்லியனாக ஆக இருந்தது.
இதற்கிணங்க தற்பொழுது ஏறக்குறைய
48.085 விகிதத்துக்கு மேலான மக்களுக்கு
முதல் தடுப்பூசிகள் செலுத்தபட்டுளள்ளது.
-ஈழம் ரஞ்சன்-