பிரித்தானியாவில் அதிகரிக்கும் தொற்றுகளும்,இறப்புகளும்.

27

பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி மேலும் 981 பேர் கொரோனா தொற்றின் காரணமாக பலியாகியுள்ளனர்.இதன் காரணமாக மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 72,548 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி 82,624 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் உயிரிழந்தது கோவிட் தொற்றின் காரணமாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை பிரித்தானியா மேலும் 50,023 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 2,432,888 ஆக உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில் பரவி வரும் திரிவு பெற்ற புதிய வைரஸ் அதியவேகமாக பரவும் திறன் கொண்டது என்பது இங்கு குறிப்பிடக்கூடியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை டிசம்பர் 22 கிடைத்த தகவலின் படி புதிதாக தினமும் சராசரியாக 2,430 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.அதேவேளை டிசம்பர் 22 ஆம் திகதி மொத்தம் 262,637 பேர் கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

28 டிசம்பர் 2020 அன்று வெளியிட்ட தகவலின் படி மொத்தம் 23,771 தற்பொழுது மருத்துவமனையில் கோவிட் தாக்கத்தின் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
டிசம்பர் 28 ஆம் திகதியில் 1,847 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

-ஈழம் ரஞ்சன்-