பிரித்தானியாவில் எப்படி லாக் டவுன் நீக்கப்படும் என்று விபரங்கள் தற்போது வெளியாகியது.

13

மார்ச் 8 பாடசாலைகள் திறக்கிறது.மாணவர்கள் மாணவிகள் சகஜமாக சென்று வரலாம்.ஆனால் 2 மீட்டர் இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்.

ஏப்பிரல் 1ம் திகதி, பெரிய ஹோட்டல்கள், துணிக்கடைகள் மேலும் அத்தியவசியமற்ற கடைகள் திறக்கிறது.

மே மாதம் 1 முதல் பார்கில் விளையாடலாம், உதாரணமாக உதை பந்தாட்டம், கொல்ஃப், பப், உணவங்கள் திறக்கலாம். ஆனால் 2 குடும்பத்துக்கு மேல் கூட முடியாது.

ஜூன் 1ம் திகதி 6 பேர் கொண்ட குழுவாக உள்ளக நிலையம் செல்ல முடியும். அதாவது வேறு வேறு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உணவகம் செல்ல முடியும். விளையாட செல்ல முடியும்.

ஜூலை 1ம் திகதி தொடக்கம் சகலதும் வழமைக்கு திரும்பும். ஆனால் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.அத்தோடு முக கவசம் அணிய வேண்டும்.

-ஈழம் ரஞ்சன்-