பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வைரஸ்

37

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக,ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.
பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக உள்ளது.

கொரோனா வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரசாக மாற்றமடைந்து வேகமாக பரவி வருவதால் ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்த தடை இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.மேலும் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து விவாதிக்க அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதன் கூட்டு கண்காணிப்புக் குழுவுடன் நாளை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-ஈழம் ரஞ்சன்-