பிரித்தானியாவில் அதிரவைக்கும் அளவில் நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. கடந்த 24 மணித்தியாளத்தில் 53,135 தொற்றுகள் பதிவாகியது.

பிரித்தானியாவில் அசுர வேகத்தில் அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸ், பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி கடந்த 24 மணித்தியாளத்தில் மேலும் 414 பேர் பலியாகியுள்ளனர்.இதன் காரணமாக மொத்த கோவிட் உயிர்ப்புகளின் எண்ணிக்கை 71,567 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாளத்தில் மேலும் 53,135 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 2,382,865 ஆக உயர்ந்துள்ளது. லண்டன் விரைவில் அடுக்கு 5க்கு செல்லும் பெரும் அபாய நிலையில்.


குறிப்பு: கிறிஸ்துமஸ் விடுமுறை வாரம் என்ற காரணத்தால் பிரித்தானியாவில் சில பகுதிகளில் கோவிட் பாதிப்பின் தகவல்கள் வெளியிடப்படாது, இதன் காரணமாக கோவிட் தொற்றின் முழு பாதிப்பும் வெகுவாக அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
-ஈழம் ரஞ்சன்-