பிரித்தானியாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு விமானத்தில் எற அனுமதி மறுக்கப்படலாம்.

14

வரும் திங்கள்கிழமைக்கு பின்னர் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவார்கள் தாம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி உள்ளது என்பதை உறுதி செய்யவேண்டும் அவ்வாறு தவறும் பச்சத்தில் பிரித்தானிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கட்டுப்பாட்டால் பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்படலாம் மேலும் அபராதமும் விதிக்கப்படலாம்.

எவராவது பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டுமானால் அவர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்கு மாத்திரம் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்- எடுத்துக்காட்டாக கல்வி தொடர்பான காரணங்களுக்காக அல்லது வேலை நிமித்தமாக.

இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் அரசால் நடாத்தப்படும் இணையதளத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும் மேலும் இவ்வாறு பயணிகள் படிவத்தை பூர்த்தி செய்துள்ளார்களா என்பதை விமான நிறுவனங்கள் செக் இன் அல்லது விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் பூர்த்திசெய்யவில்லை என்றால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம்.

அனுமதிக்கப்பட்ட காரங்கள் தவிர்ந்த வேறு காரங்களுக்காக பயணம் செய்ய எவரேனும் முயட்சி செய்தால் பொலிஸாரின் கவனத்துக்கு வரும் வேளையில் அவர்களுக்கு குறைந்த பட்சம் 200 பிரித்தானிய பவுண்டுகளும் அதிகப்படியாக £6,400 பிரித்தானிய பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்படலாம்.

https://www.gov.uk/guidance/coronavirus-covid-19-declaration-form-for-international-travel