கொரோனா வைரஸ் அதிக அளவில் உள்ள பிரித்தானியா,ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வரும் வெள்ளிக்கிழமை
முதல் வேல்ஸுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இன்று (14 அக்டோபர் 2020) பிரித்தானிய அரசு அறிவித்த தகவலின் படி மொத்தம் 19724 (நேற்று 17,234 ) புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளது.பிரித்தானியாவில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை தற்போழுது 654,644 (நேற்று 634,920)
ஆக உயர்ந்துள்ளது.இறப்புகளைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும்137 (நேற்று 143) பேர் பலியாகினர். இன்றய இறப்புகளின் எண்ணிக்கையையும் சேர்த்து கொரோனா வைரஸ் தாக்கி 28 நாட்களுக்குள் மொத்தம் 43,155 (நேற்று 43018) பேர் இறந்ததாகப் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.இதே வேளையில் 57,690 பேரின் மரணச் சான்றிதழில் இறந்தவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.