பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்

444

1983 கறுப்பு யூலையின் பின்னனி

யூலைப்படுகொலை என்பது திருநெல்வேலி தாக்குதல் உடனடிக்காரணமாக அமைந்ததே தவிர இனப்படுகொலைக்கான ஆயத்தங்களை சிங்களதேசம் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை.அந்த பின்னனி பற்றி நோக்குவோம்.
1) 1983 மே மாதம் பெரதேனியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரதேனியா பல்கலைக்கழக அருணாசலம் மண்டபத்தில் வைத்துத் தாக்கப்பட்டனர். தாக்கியவர்கள் யாரால் என்றால் இல் பல்கலைக்கழக பதிவாளராக 1976ல் இருந்த இருந்த விமல் சுந்தரவின் மாணவர்களான துல்சி விக்கிரமசிங்க மற்றும் டொக் கமகே ஆகியோரின் தலைமையிலான குழுவினால்

2) 1983யூன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கபினற் மினிஸ்டர்கள் சிலர் கிளாஸ்களை உடைத்து தமிழர் விரோத கோங்களை உழுப்பி சத்திமிட்டுவிட்டு வெளியேறினர். இதன்பின்னர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பெஸ்ரஸ் பெரேரா தன்னுடைய தொண்டர்களுக்கு பிறவுன் கொட்டேல் கடற்கலையில் வைத்து ‘let them wait a few weeks , they will learn a good lesson‘‘ என்று சொன்னார்.

3) 1983 யூலை 11 இல் ஜே.ஆர் ஜயவர்த்தனா ‘‘நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.இப்போது அவர்களைப்பற்றி எம்மால் சிந்திக்க முடியாது. அவர்கள் உயிர்களைப்பற்றியோ, அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியோ சிந்திக்க முடியாது என்கிறார் (“I am not worried about the opinion of the Jaffna people.. now we cannot think of them, not about their lives or their opinion about us … Really if I starve the Tamils out, the Sinhala people will be happy”. (London Daily Telegraph.11.july.1983)
இதிலிருந்து தமிழர்கள் அழிக்கவேண்டும் என்ற வக்கிரம் ஜனாதிபதி மனதில் குடிகொண்டிருப்பதை காட்டுகிறது.

4) அதேவேளை பின்நாளில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துளத்முதலி ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக தன் நண்பரான கலாநிதி டேவிட் செல்போர் என்பவர் ‘‘இனப்பிரச்சனைக்கு எத்தகைள தீர்வை காணப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு ‘‘….Smash The Heads of the Tamils‘‘ என்று சொன்னார்.

5) அன்றைய நாளில் காணி, மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமினி திசநாயக்க. ““it would require 14 hours for Indian troops to come and rescue them but the Sinhalese could destroy them in 14 minutes if they wanted to.““ (அவர்கள்(தமிழர்கள்) வேண்டிக் கொண்டால் அவர்களைக் காப்பாற்ற இந்தியப்படைகள் வர 14 மணித்தியாலங்கள் எடுக்கும். சிங்கள மக்கள் நினைத்துவிட்டார்களெனில் தமிழர்களை அழித்து முடிக்க 14 நிமிடங்கள் போதுமானது.)

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் ஒன்றும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல ஒரு இனப்படுகொலைக்கு சிங்களம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி தாக்குதல் இடம்பெற்றுவிட்டது. திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினருடைய சடலங்களும் பொரளை மயாணத்தில் தகனம் செய்யப்பட்டது.
24ஆம் திகதி மதியம் 2மணியளவில் கொழும்பு வீதிகள் எங்கும் படுகொலைகள் ஆரம்பமாகிவிட்டது.

சிங்களக் காடையர்கள் தமிழர்கள் வாழும் வீடுகளில் சென்று தமது தாக்குதல் அராஜகத்தினை மேற்கொண்டனர். ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும்போது அந்த அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலினை கையில் வைத்திருந்தனர் என்பதுவும் கவனிக்ப்பட வேண்டும்.

காடையர்கள் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை வழிமறித்து நீ சிங்களவனா எனக் கேட்டார்கள் அப்போது அவர் ஆம் என்றால் அவர் சிங்களவன் என்பதற்கான அடையாளத்தை காட்டவேண்டும். இதுஒரு புறம் புத்தரினுடைய பாட்டினை பாடிக்காட்ட வேண்டும் Buddunta Wandina Gathawa Kiyanava – (tell me the stanza that you warship the Lord Buddha அப்போதுதான் விட்டார்களாம். இதன்போது ஐலண்ட் பத்திரிகை நிருபர் அமிர்த அபேசேகர அப்பகுதியால் செல்லும் போது அவரையும் கேட்டார்களாம் அவர் திருப்பி அந்த காடையர் தலைவனைக் கேட்டாராம் நீ சொல்லு எண்டு அவரால் சொல்ல முடியேல்லை என்பதையும் ஐலண்ட் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார்.

கொழும்பிலை நடைபெற்ற படுகொலைகளுக்கு கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ தலைமைதாங்கியிருந்தார். ஜாதிக சேவக சங்கமய (JSS) என்கின்ற தொழில் நிறுவனத்தை தூண்டி வெள்ளவத்தை பகுதியில வீடுகளை தீக்கிரையாக்கினர். சிறில் மத்தியூதான் கொழும்புப் படுகொலைகளை தலைமை தாங்கியது என India Today of 31st August 1983, தெரிவித்திருந்தது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தெகிவளை கல்கிசை மாநகராட்சி கவுன்சிலர் தலைமையிலான கும்பல் மவுண்லவேனியா, கல்கிசை, புறக்கோட்டைப் பகுதிகளில் 442 கடைகளை எரித்து அழித்திருந்தனர்
அலோசியஸ் முதலி மகனுடன் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து பொரளை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் சீருடைய அணியாத இராணுவம் பயன்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கை போக்குவரத்து சபைக்குறிய வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து அமைச்சராக எச் முகம்மட் இருந்தார்.

நோர்வே நாட்டு சுற்றுலாப்பயணிகள் Mrs. Eli Skarstein, 15-year-old daughter, Kristen, ஒரு மினிபஸ்சுக்குள் 20 பேரைப்போட்டு தீயிட்டதை பார்த்ததாக ர வாக்குமூலமளித்துள்ளனர்.

நுவரேலியாவில் காமினி திசநாயக்கா பற்றிக் சாரம் உடுத்தியபடி போய் கூட்டத்தை நடத்தி தமிழனையும் கடைகளையும் எரியுங்கள் என்று சொன்னார். அத்தோடு அவன் ஐ.தே.கட்சியின் கேரத் ரணசிங்க என்கின்ற ரவுடி கலவரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். பியதாச, 81 -89 வரையான பக்கங்களில் குறிப்பிடுகிறார்.( L.Piyadasa , Srilanka: The Holocaust and After , 1984)

இந்த பியதாச தான் 1983 கலவரத்தைப்பற்றி விரிவாக எழுதியவர். இந்தப்புத்தகம் எழுதியதற்காக அவருடைய கண்டி வீடு அடித்துநொருக்கப்படுகிறது.

இக்கொலைகள் ஒருபுறம் இடம்பெற்றிருக்கும் போது இந்திராகாந்தி ராஜசபாவில் its genocide என்று கூறினார். அத்துடன் P.V.நரசிமராவை கொழும்புக்கு அவசரமாக அனுப்பினார் நரசிமராவ் ஜேஆர் இடம் நீங்கள் நிறுத்துகிறீர்களா? அல்லது நாங்கள் நிறுத்தவா? என்று கேட்டதன்பின் ஜேஆர் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். The London Times of 30th July 1983

25ம் திகதி குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உட்பட 35 பேரரும் 27ம் திகதி மேலும் 18 பேருமாக 53 பேர் கொல்லப்பட்டனர் இதன்போது ஜெயிலர்களாக இருந்த ரோஜர் ஜெயசேகர, சமிதரட்ண அல்லது சமிதரத்கம ஆகியோர்க் இதற்கு பெரிதும் உதவினர்.
இலங்கையில் இத்தாலியா விமானத்தை கடத்திய சேபால ஏக்கநாயக்க என்பவர்தான் வெலிக்கடை சிறை படுகொலைகளின் மிகமுக்கியமாக கொலையாளி. இவன்தான் மருத்துவர் சுந்தரத்தை கொன்றவன்.

யூலைப்படுகொலை நாட்களில் 3000 வரையானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என TRRO தெரிவித்திருந்தது.

கொழும்பில் இவ்வாறு மனிதப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் யாழில் ரக் வண்டியில் வந்த இராணுவத்தினர் சரமாரியாக சுட்டனர். இதில் மானி;ப்பாய் – சுண்ணாகம் வீதியில் வந்துகொண்டிருந்த பஸ் நோக்கியும் இராணுவத்தினர் சுட்டனர். இதில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும், பல்கலைக்கழக சமூகத்தினால் வெளியிடும் மாதாந்தப் பத்திரிகையான மனிதம் பத்திரிகையின் ஆசிரியர் விமலதாஸ் கொல்லப்பட்டார்.

அத்துடன் இலக்கியவாதி கலா.பரமேஸ்வரன் பலாலி வீதியில் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். மேலும் காரைநகரிலிருந்து வந்த பேரூந்தினை மறித்து அதில் வந்த 13 பேரை நிரையில் நிற்கவைத்து 12 பேரைக் சுட்டுக்கொன்றனர். இதில் ஒருவர் ஓடித்தப்பி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல். யாழில் மொத்தம் 51 தமிழர்கள் கொல்லப்பட்டதாக TRRO அறிக்கை தெரிவிக்கிறது.

27ஆம் திகதி ஜனாதிபதி தமது உரையில் இக்கொலைகளுக்கு எந்தவிதமான அனுதாபமும் தெரிவிக்கவில்லை. அமைச்சர் அனந்த திஸ்ஸ டி அல்விஸ் த காடியன் நியூசுக்கு 28.யூலை கொடுத்த பேட்டியில் சில நிறுவனங்கள் செயற்பட்டதாகவும், தாம் அது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் இது ஒரு Hit and Run Operation என்றும் கூறினார்.

  • தி.திபாகரன்
    22-07-2012
    (மீள்பதிவு)