பிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி

22

பிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி: கொரோனா சுதந்திர தினத்தை மே மாதமே அறிவிக்கலாம் மக்கள் மகிழ்ச்சியில்.

பிரித்தானியாவில் முதல் தடவையாக கொரோனா தொற்று 60% விகிதத்தால் குறைவடைந்துள்ளதோடு. கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு 442 ஆக பதிவாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 40% விகிதத்தால் குறைவடைந்துள்ளது.மேலும் வைத்தியசாலை அனுமதி என்பது வெறும் 1,000 பேர் என்று குறைவடைந்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது 18 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மொத்தமாக 66 மில்லியன் மக்கள் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட பல முக்கிய நகரங்களை குறி வைத்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த முறையை பிரித்தானியா கையாண்டதில் பெரும் வெற்றிகண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கொரோனா இல்லாத சுதந்திர நாடாக பிரித்தானியா வர உள்ளதாக மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதோடு.
சுதந்திர தினமாக மே மாதம் அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

-ஈழம் ரஞ்சன்-