தலைவர் பிரபாகரனை தோற்கடித்தது வீழ்த்தியது அவரை ஏமாற்றியது, தமிழக மக்களாகிய நாம் தான். தலைவர் இறந்திருப்பாரேயானால் அவரை கொன்றது நாம் தான்
சிங்கள்னோ வடுகனோ வல்லாதிக்க வஞ்சகமோ பல நாடுகளின் துரோகமோ அல்லவே அல்ல
30 ஆண்டுகாலமாக தலைவரின் ஆயுதப்போரில் எதிரிகளை வென்றிருக்கலாம் ஆனால் அத்தனை ஆண்டுகாலமும் அவரை நாம் தோற்கடித்து கொண்டே தான் இருந்திருக்கிறோம்
நெடுமாறன் முதல்,வைகோ, ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி , சீமான் என்று இத்தனை பேரை இங்கிருந்து வரவேற்று தலைவர் சந்தித்தது ஏன்?
தங்கள் ஆயுதங்களையும், தங்களின் போர்த்திறனையும் காட்டி பெருமைப்பட்டுக்கொள்ளவா?
அவர் ஈழத்திற்கான அரசியல் பலம் மேலோங்க தமிழகத்தின் அரசியலை பலப்படுத்த விரும்பினார். தமிழகம் அரசியலில் தன்னிறைவு அடைந்தால் தான் ஈழம் மலரும் என்று தலைவரும் புலிகளின் தலைமைகளும் நன்கு உணர்ந்திருந்தனர்.
அதை சாத்தியப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடும், வேண்டுதலையும் தான் தலைவர் இங்கிருந்து சென்ற அனைவரிடமும் முன்வைத்தார், அதற்காக தான் அவர்களை வரவேற்றார். ஆனால் முப்பது ஆண்டுகாலமாக நாம் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துள்ளோம். புலிகள் நம் பெருமை புலிகள் வீரம் படைத்தவர்கள் என்று ஆக்சன் பித்தர்களாக தான் நாம் இருந்திருக்கிறோம். அதுவே தலைவரையும் புலிகளையும் இன்று வீழ்த்தியுள்ளது.
இன்று பேசப்படும் தமிழ் தேசியம் முப்பது வருடகாலகட்டத்திற்குள்ளாக(2004)க்கு முன் எப்போது பேசப்பட்டிருந்தாலும் தழைத்திருந்தாலும் இன்று ஈழம் ஒரு தேசமாய் மலர்ந்திருக்கும் . பிரபாகரன் ஏன் அவ்வபோது தமிழக அரசியல்வாதிகளை அழைத்து பேசுகிறார் அவர் தமிழகத்திடம் எதை எதிர்பார்த்தார் என்று சற்றும் சிந்திக்காத முட்டாள் கூட்டம் நம்மால் தான் அங்கே இப்படி ஒரு இன அழிப்பு சாத்தியப்பட்டது. நம்மால்தான், நம்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நாம் செய்த துரோகத்தால் தான், நாம் அந்த நம்பிக்கையை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏமாற்றியதால் தான் தலைவரும் புலிகளும் வீழ்ந்ததற்கான முழுமுதற் காரணம்
சிங்களைனை காட்டிலும் ஹிந்தியாவை காட்டிலும் புலிகளை அதிகம் அழித்ததும் புலிகளுக்கு துரோகம் இழைத்ததும் நாம் தான். நாமே தான்