எங்க தலைவர் குடிக்க மதுக்கடை தந்தார், பார்க்க டிவி தந்தார், போன் தந்தார், ஃபேன் தந்தார், ஆடு தந்தார், மாடு தந்தார், வீடு தந்தார்… உங்க தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு என்ன தந்தார்?
இப்படியான கூமுட்டைத்தனமான கேள்வியை ஒரு கூட்டம் கேட்கத் தொடங்கியுள்ளது. அந்த அறிவீனக் கூட்டத்திற்கு என் இனமான சொந்தங்கள் சார்பாக இந்த பதில்…
எட்டு வயதில் பகத்சிங்கை படித்துவிட்டு, அப்பா ஆசைப்படுவது போல அரசாங்க வேலையல்ல என் இலக்கு, என் மக்களுக்காக அரசாங்கத்தை உருவாக்குவதே என் இலக்கு என சொன்ன பிரபாகரன், எனக்கு சிறுவயதிலேயே மக்களைப்பற்றி சிந்திக்கும் சிந்தனையை தந்தார்.
தமிழர்களுக்கென ஒரு தலைவனை சொல் என யாராவது கேட்டால் பிரபாகரன் என பெயர் சொல்லும் வாய்ப்பை தந்தார்.
தமிழர்களுக்கு ஒரு இடரெனில் புயலென வரும் புலிப்படை எனும் நம்பிக்கை தந்தார்.
ராணுவம், வங்கி, ஊடகம் என தீவுக்குள் தனிநாட்டை கட்டியெழுப்பிய சமகால தமிழ்ப் பேரரசரை பற்றி எம் தலைமுறை படிக்க வரலாறு தந்தார்.
இனமே பலம், பலமே இனம் என இன விடுதலைக்காக போரிட்டு செத்தாலும் சாவேன், மண்டியிட்டு கால் நக்கி வாழ மாட்டேன் என்ற திமிரை தந்தார்.
பெண்களை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், பெண்ணின் வீரத்தை புலிப்படையாக மாற்றி எப்படி மதிக்க வேண்டும் என்றும் அறிவை தந்தார்.
இனத்துக்கு துரோகம் இழைப்பவன் தேர்தல் உட்பட எதிலும் வெல்லவே முடியாது என்ற பயத்தை தமிழக/திராவிட அரசியலுக்கு தந்நார்.
சொந்த மகனுக்கு பூ பாதை, மற்றவர் மகனுக்கு முட் பாதை என இல்லாமல் சொந்த மகன்களை போர்க்களத்தில் பலிகொடுத்து தேர்க்காலில் மகனையிட்ட மனுநீதிச்சோழனுக்கு மறு பிறவி தந்தார்.
போர் உச்சத்தில் இருந்தபோது கொத்து கொத்தாக உயிர்கள் போகிறது, எதிரிகளை சிதறடிக்க அவர்களின் சிலரின் குடும்பத்தை சிதறடித்தாலே போதும், அனுமதியுங்கள் என கேட்ட படையிடம் நமக்கு எதிரி அதிகார வர்க்கமே ஒழிய அவர்கள் குடும்பம் இல்லை, அவர்கள் பெண்களும் நம் பெண்களும் வேறல்ல என சொல்லும் அளவுக்கு, அறமென்றால் என்ன என்ற அர்த்தத்தை தந்தார்.
உலகநாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் நேருக்கு நேர் வீழத்த முடியாமல் துரோகத்தால் தான் என் தலைவனை வீழ்த்த முடிந்தது என பேசும் வீரச் செருக்கை தந்தார்.
மகான் கிருபானந்த வாரியாரால், இறைவன் எப்பொழுதாவதுதான் ஒரு அவதார பிறப்பை உருவாக்கி இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், பூமிக்கு அனுப்புவதுண்டு. அப்படிப்பட்ட அவதாரம்தான் தம்பி பிரபாகரன். தம்பி பிரபாகரன் என் அப்பன் முருகனுக்கு சமமானவன், அவனுக்கு மரணமில்லை என விவரிக்கப்பட்டவர் தலைவர் பிரபாகரன். அப்படி ஒரு மனிதன் மக்களுக்காக வாழ்ந்தால் அவனுக்கு மரணமே இல்லை என்ற புரிதலை தந்தார்.
அவர் இருந்தால் எம் தலைவன், இல்லாவிட்டால் எம் இறைவன்.
ஓட்டுப் பிச்சைக்காக இந்த மண்ணை ஆண்டவர்கள் அள்ளிப் போட்ட இலவசங்களை பொறுக்கித் தின்ற நன்றிக்காக வாலாட்டும் நாய்க்கூட்டம் அல்ல இது..,
உரக்கச் சொல்வோம்…
இது புலிக்கூட்டம்.