அராஜக காவல்துறை கட்டமைப்பு பின்னால் உள்ள அரசியல்

118
[poll id= “3”]

சாத்தான்குள காவல் நிலையப் படுகொலைகளுக்குப் பின் நிறைய பேருக்கு காவல் துறையின் அராஜகப்போக்கு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. புதிதாகப் பிறந்திருக்கிறார்கள். பிறந்தநாள் வாழ்த்துகள்.

அதற்காக வரலாற்றுப் பிரக்ஞையை முற்றிலும் இழந்து விட வேண்டும் என்பது அவசியமில்லை. எனக்குத் தெரிந்து 70களில் காணாமலடிக்கப்பட்ட தமிழக நக்சல்பாரிகள், பரமக்குடியில் சுட்டு வீழ்த்தப்பட்டவர்கள், தாமிரபரணியில் மூழ்கடிக்கப்பட்டவர்கள் என்று காவல்துறை நிகழ்த்திய படுகொலைகள் ஏராளம், ஏராளம்.

சாத்தான்குள சம்பவத்திற்காக கண்ணீர் விடுபவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் – இந்தக் காவல் துறையால் தான் இத்தனை வருடங்களும் பெரும்பான்மை மக்கள் உயிரிழந்து உடமையிழந்து வாடுகிறார்கள். அதை மறைத்து விட்டு, ஏதோ இப்பொழுது தான் அத்துறை கெட்டு விட்டதாக பசப்பாதீர்கள்.

திராவிட அரசுகள் அதிகாரத்திற்கு வந்த பின்பு, காவல்துறையில் சாதி என்னென்ன விளையாட்டு விளையாடியது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உள்ளன. அதைப் பேசுவது விடுத்து, சினிமாக்களில் போலிஸை வீரர்களாக சித்தரித்தது குறித்து விசனப்படுவது போலியிலும் போலி.

இந்தப் பிரச்சினையைக்கூட பொது விவாதமாக மாற்றாமலிருப்பது திராவிட கட்சிகளின் மறைமுக நோக்கம். ஏனென்றால், ஆட்சிக்கு வரும் எந்தத் திராவிட கட்சிக்கும் இதே காவல்துறை, இதே அராஜகத்தோடு கட்டாயம் தேவை என்பது தான் வரலாறு.

தர்மராஜ்