இனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…

77

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் ஆவார்.

05.06.1974 வித்தாகிய பொன்.சிவகுமாரனின் வீரவணக்க நினைவுநாள் நாளையாகும்.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தமிழினப் படுகொலைகளும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால்- தமிழ் மக்களின் சுதந்திர இருப்புக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின.

இந்நிலையில் தான் – மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும்,

சிங்கள பேரினவாத அடக்குமுறையாளர்களின் பிடியிலிருந்து – தமிழினம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டான்.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் சயனைட் நஞ்சருந்தி 05.06.1974 மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

மறக்குமா நெஞ்சம்…

Theepan