பொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று

43

இல்-து-பிரான்ஸ் மிகவும் உச்சமான கொரோனத் தொற்றில் சிக்கி உள்ளது. இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகள் மேலதிக தீவிரசிகிச்சை நோயாளிகளை உள்வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள.

இதே நேரம், இல்-து-பிரான்சில் 93 ஆம் மாவட்டமான செய்ன்-சன்-துனி (Seine-Saint-Denis) அதியுச்சத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளது.
த்ரோன்சியின் லிசேயில் மட்டும் 50 மாணவர்களிற்கும் 15 ஆசியரியர்களிற்கும் தொற்று ஏற்பட்டதால், ஓரே லிசேயில் 22 வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.

லிசேயை மூடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டும் அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது.

செய்ன்-சன்-துனியில் கொரேனாத் தொற்று விகிதமானது, பிரான்சிலேயே அதியுச்சமாக 100.000 பேரிற்கு 790 ஆக உச்சமடைந்துள்ளது.

ஆனால் 53.353 சனத்தொயைக் கொண்ட பொண்டி (Bondy) நகரம், 26.783 சனத்தொயைக் கொண்ட மொன்பேர்மெய் (Montfermeil) ஆகியவற்றில் 19.03.2021 இற்கும், 25.03.2021 இற்கும் இடைப்பட்ட கொரோனாப் பரிசோதனையில், இங்கு கொரோனத் தொற்று வீதமானது 100.000 பேரிற்கு 1.000 என்ற, எங்குமே இல்லாத பெரும் தொற்று வீதத்தை எட்டி உள்ளது.