இதுபோலவே அதுவும் ஒரு சூனிய இடைவெளி நாட்களே…
இன்றைவிட அன்று மனிதம் உருக்குலைக்கப்பட்ட பொழுதுகள் அவை..
அகிம்சை தேசமென்ற முகமூடி அணிந்த உலகின் கேவல தேசமொன்று எம் தாயகத்தில் தம் உச்சக்கட்ட கேவலங்களை அரங்கேற்றிய பொழுதுகள் அவை…
தம்குஞ்சுகளை காக்க தாய்க்கோழிகள் அணிதிரண்டன அன்னையர் முன்னணி என…
அகிம்சை எனும் தன் சிறகுகளால் அடித்துக்கொண்டே இருந்து ஒரு தாய்க்கோழி… தன் கடைசி சிறகு உதிரும்வரை…
இன்று இதே தினத்தில் தன் தியாகப் பெரு நெருப்பை அது விதைத்து.
இந்த தேசத்தின் அன்னையாக ஜொலித்தது.
மண்விழுங்கி ஊழி என வந்த சுனாமி கூட, இவள் புகழுடல் இருந்த இடத்தை அசைக்கவில்லை…
வணங்குகின்றேன் அன்னையே…. உன் தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துப்போகிறேன்…
சிலர் தந்தை செல்வா என்னும்போது மறுதலிக்கும் என்மனது, அன்னை பூபதி எனும்போது கண்ணீரால் உனை அர்ச்சிக்கிறது.
– Janarthan