போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன்

189

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளரும்,சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியுமான லெப் கேணல் ராஜன் (றோமியோ நவம்பர்)
தனது சொந்த ஊரான மாதகலை ஆக்கிரமித்து முன்னேறி வந்த சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்துக் களமாடச் சென்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தளபதியின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்குத் தாக்குதல் நடவடிக்கை.

27.08.1992 அன்று மாதகல் பகுதியில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்கு பதிலாக பதிலடித்தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களாள் .தளபதி சொர்ணம்.அவர்களுக்கு கூறப்பட்டது.

.( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். )அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல.மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும்.அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும்.இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது.அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன்.பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதியின் வீரச்சாவிற்க்கு பழிவாங்குவதென்றால்.அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது .வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள்.அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது .அதுதான் வெற்றிலைக்கேணி பெரியமண்டலாய்.வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார்.தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இந்த பதிலடித் தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப் கேணல் ராஜன் உட்பட ஏனைய போராளிகளினதும் வீரச்சாவை நெஞ்சில் நிறுத்தி எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட

கப்டன்

இதயன்

பிரான்சிஸ் ஜேசுநேசன்

மன்னார்

வீரச்சாவு: 28.08.1992

லெப்டினன்ட்

மன்றவாணன்

கதிர்காமவேலன் சிறிகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1992

லெப்டினன்ட்

தொல்காப்பியன்

சுப்பிரமணியம் வசந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1992

வீரவேங்கை

கோமகன்

மாணிக்கம் ஞானசேகரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1992

ஆகிய மாவீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி பூசித்து வணங்கி இவர்கள் கொண்ட உன்னத இலட்சியம் நிறைவேற தொடர்ந்து மாவீரர்களின் நினைவில் தடம் பதித்து வாழ்வோம்.

தாயக விடுதலைப் போராட்ட வரலாற்று தடங்களோடு “ராஜ் ஈழம்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”