போதித்த புத்தர்சாதித்து காட்டிய தமிழீழத் தேசியத் தலைவர்…

262

புத்தரின் போதனை தன்னுயிர் போலவே அனைத்து உயிர்களையும் போற்றுவது,தன்னலம்
போலவே பிறர் நலமும் பேணுவது,அன்பு
கருணை,பொறுமை,பிறர் நலம் காண்பதில்
மகிழ்ச்சி என்று உலகிற்கு எடுத்துக் காட்டி
வாழ்ந்து போதித்தவர் புத்தர்.

மனிதனை மனிதன் இழிவுபடுத்த வழிவகுத்த வர்ண தர்மப் பாகுபாடுகளையும்
சாதிப் பிரிவினைகளையும் எதிர்த்து அனைவரும் சமம் என்று உலகுக்குப் போதித்த முதல் சீர்திருத்தவாதி அவர்.

பெண்களைத் தாழ்வுபடுத்தி அவர்களை அறியாமை இருளில் தள்ளி வைத்த விதிமுறைகளை எதிர்த்தவர்.
கீழ்ச்சாதியினருக்கும் பெண்ணினத்துக்கும்
கல்வியறிவு மறுக்கப்பட்டு பிராமணர்களுக்கே ஞானம் என்றிந்த நிலையை மாற்றி அனைவரும் கல்வி
ஞானம் பெற வேண்டி போதித்து வாழ்ந்தவர் புத்தர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்
புலிகள் இயகத்தின் தோற்றமும்,வளர்ச்சியும்
அவர்களது இலட்சியப் போராட்டமும்,சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின்
செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடிதளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்ப்படுத்தியிருக்கின்றன.

இது சமுகத்தின் உணர்வுகளிலும் பாரிய
மாற்றங்களை எற்ப்படுத்தியுள்ளது.
இன்று,சாதி குறித்துப் பேசுவதோ,செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட அது வெட்கக்கேடானது.
அநாகரீகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக
இருந்து வந்த சமூக உணர்வில் எற்ப்பட்ட
பிரமாண்டமான மாற்றமாகும்.

அதே நேரத்தில் தேசிய ரீதியில்,பொருளாதார
ரீதியிலாக மும்முனைகளில் பெண் விடுதலை போர் முனைப்புறுவதாயின்,பெண்ணினம் முதலில் மனோரீதியாக சமூகத்தின் கருத்துலக மாயையிலிருந்து விழிப்படைய வேண்டும்
என்பதையும் தலைவர் பிரபாகரன் வலியுறுத்தத் தவறவில்லை.

பெண்ணடிமைவாத மூட நம்பிக்கையின் பிறப்பிடம் கருத்துலகம் என்றார்.

மனித உறவுகளில் அடிப்படையானது ஆண்-பெண் உறவு.
இந்த உறவு சாதாரண சமூக உறவு அல்ல.
இது மனித இனவிருத்திக்கும்,உயிர் இயக்கத்திற்க்கும் மூலமானது என்கிறார்
ஆண்-பெண் உறவில் எழும் அபசுரங்களாகவே இன்று பெண்ணினம் எதிர்கொள்ளூம் பல அவலங்கள் தோற்றம்
பெறுகின்றன என்கிறார்.

இன்று எமது நிலத்தில் மண்மீட்ப்பு போர்க்களத்தில் பெண்கள் ஆயுதம் ஏந்தி
நிற்கிறார்கள். முழு உலகமே வியக்கும்
வகையில் அபாரமான அர்ப்பணிப்புகளைச்
செய்து வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் மகளிர் படைப் பிரிவின் தோற்றமும், வளர்ச்சியும்,எழுச்சியும்
எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை நான் பெருமிதத்துடன் கூற முடியும்.

தமிழீழப் பெண்ணினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக்குறித்து நிற்கிறது என்கிறார் எங்கட தலைவர்.

இவன் போதிக்க பிறந்தவன் அல்ல
சாதிக்க பிறந்தவன்.

கதிா் ஈழம்