இருளோடு வாழ பழகுங்கள்.!

190

மின்சாரம் கண்டுபிடித்து சில நூறு வருடங்கள்தான்,ஆனால் இன்று ஒரு நிமிடம் கரன்ட் இல்லை என்றாலும் பெரும்பாலான மக்களால் இருக்கவே முடிவதில்லை.அவ்வளவு தூரம் அவர்கள் கரன்டினால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.மனித உடலினுள் நடைபெறும் செயற்பாடுகள் அனைத்தும் மூளையின் சில கரன்ட் சிக்னல்கள் மூலமே தொடர்புகளை மேற்கொள்ளுவதாக அறிவியல் கண்டுபிடித்துள்ளது.இயற்கையாக இருந்து இலத்திரன்களை அருட்டி ஓட வைப்பதன் மூலம்,மின்சாரத்தை உருவாக்கி பெற்று கொள்கின்றது.இயற்கையாக அமைந்த இருமையில்பான இரவு பகல் விகிதத்தை செயற்கையாக மாற்ற இன்று உலகில் மின்சாரம் தெரிந்தோ தெரியாமலோ,திட்டமிட்டோ திட்டமிடபடாமலோ பயன்படுகின்றது.

மின்சார பல்பை கண்டுபிடிக்கப்பட்டதை பெரிய சாதனையாக கொண்டாடும் உலகம்,அதனால் குழம்பிய இயற்கை சமனிலை,ஒளிர் செறிவுகள் மூலம்,தாவரங்கள் தொடக்கம் மனிதர்கள் வரை அவற்றின் இயற்கையான இருப்புக்கள் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளதை அறிய முடியாத அளவு மனித மனம் இருளில் மூழ்கிகொண்டுளதுடன் அதனை மறைக்க வெளியே ஒளியை தேடிகொண்டுள்ளது.அழுகும் வெள்ளையை சுத்தம்,உயர்வானது என்ற மனப்பான்மை கொண்ட உலகில்,அழுக்காக முடியாத கறுப்பு கேவலபடுத்துப்படுகின்றது.மனித மனம் ஒளியால் மாசுபடுவதுடன் இருளினால் பிரகாசிக்கின்றது.இது மனிதர்கள் தாண்டி அனைத்து உயிர்களுமே இருளினாலே வளர்கின்றது.அறிவியலாக எல்லா நிற சூரிய கதிர்களையும் தனக்குள் எடுக்காது தெறிக்க செய்யும் வெள்ளையில் எதுவும் இல்லை,ஆனால் எல்லா கதிர்களையும் தனக்குள் உறிஞ்சு கொள்ளுகின்ற கறுப்பு எனர்ஜி எனப்படும் சக்தியே பிரபஞ்சம் முழுதும் நிரம்பிகிடக்கின்றது.மனிதர்களிலும் வெள்ளை என்பது மெலனின் நிறபொருள் குறைபாடுடையவர்கள்.அவர்கள் விற்றமின் மாத்திரைகள் இல்லாமல் வாழமுடியாது.உலகிற்கு அடிப்படையான சூரிய ஒளி அவர்களுக்கு எதிரியாக இருக்கின்றது.அவர்களால் அதனை தாங்கமுடியாது.ஆனால் உலகம் அவர்களை பெரியவர்களாக திறமைசாலிகள்,உயர்ந்தவர்களாக கட்டமைத்து கொண்டுள்ளது.

இன்று சிறிலங்கா முழுதும் மின்சார தடை,இன்று ஒரு நாளாவது உங்கள் கண்களுக்கு டீவி,போன் விடுமுறை கொடுக்கட்டும்.இருளை கண்டாலே வெறுத்து ஒதுக்கும் அறியாமை மக்களிடமிருந்து அகலட்டும், மனிதர்களை தவிர உலகின் அத்தனையாயிரம் உயிரினங்களும் இரவை அனுபவிக்கின்றது.ஆனால் மனிதர்கள் மட்டும் அதனை தொடர்ந்து தவறவிடுகின்றனர்.கண்ணை மூடிய பின்னரான இருளிலேயே மனித ஆன்மா பிரகாசித்து ஆன்மீகம் மலர்கின்றது.இவ்வாறாக அத்தனைக்கும் ஆதாரமாக இருள் நிறைகின்றது.பிரபஞ்சத்தில் இருளே நிரந்தரமானது,ஒளி தற்காலிகமானது.இன்றிரவாவது உங்கள் கண்கள் இருள் வானை நோக்கட்டும்,நாலாயிரம் கோடி விண்மீன்களை பாத்து ரசிக்க உங்களுக்கு இந்த ஒரு வாழ்வு போதாது என்பது புரிய வரும்.சிறிய இன்ப துன்பங்களுக்கே வாபில் தாவி,கண்ணை கசக்கும் உலகம்,இந்த தொலைதூர நட்சத்திரங்களை பார்த்தபின்னராவது அதன் சிறிய சிறகுகளை உடைத்து வெளியில் வரட்டும்,வாழ்வினை சிறிய சிறிய வட்டங்களுக்குள் வளைத்து போட்டுவிட்டு அங்குமிங்கும் அலைந்து திரியும் உங்களுக்கு,இந்த நட்சத்திரங்கள் நல்ல பாடத்தை கட்டாயம் கற்றுகொடுக்கும்,நேரம் ஒதுக்கி படித்துகொள்ளுங்கள்.