பிரபாகரனையும் பொட்டம்மானையும் காவு கொள்ளத் திட்டமிட்டோம்…

1103

கடந்த வாரம் அரை உண்மை பேசும் உளவியல் யுத்த வடிவத்தை பார்த்தோம். இந்த முறைஅதே வகையில் சற்று வித்தியாசமான இன்னொரு வகையை பார்ப்போம். இது வழுநிலை (fallacious) விவாத வகையாகும் ஆங்கிலத்தில் snappy statements  என்பார்கள். மன்னிக்கவும் இதற்கான சரியான தமிழ் வார்த்தையை என்னால் அடையாளம் காண முடியவில்லை. snappy வார்த்தைகள் பாதகமான ஒரு விடயத்தை நியாயப்படுத்த சரியானது போல்தோன்றும் ஒரு விடயத்தை முன்வைப்பது ஆகும். சுற்றி  வழைத்துப் பேசுதல் எனக்கூறலாமா தெரியவில்லை.

கடந்தவாரம் பி.பி.சி தமிழோசைக்கு எரிக் சொல்கெயிம் வழங்கிய பேட்டி இந்த snappy statements வகையை சேர்ந்தது என நான்கருதுகின்றேன். அதன் பின்னாலுள்ள உளவியல்  போர்  சூனியத்தை  நாம் புரிந்து கொள்ளல் என்பது இது போன்ற இன்னும் வரக் கூடியஉளவியல் போர் வடிவங்களையும்  கட்டுரைகளையும் புரிந்து கொள்ள உதவும் என நம்புகின்றேன்.அந்த வகையில், ” பிரபாகரன் பொட்டு அம்மான் தவிர்ந்த மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நாம் முன்வைத்தோம். புலிகள் அதற்கு உடன்படவில்லை அதனால் தான் இத்தனை அழிவும் ஏற்பட்டது” என எரிக் சொல்ஹெய்ம் கூறியிருந்தார். மேலோட்டமாக பார்த்தால், சொல்ஹெய்ம் அழிவை தடுக்க முனைந்த மனிதன் போல் தெரிவார். உண்மை அதுவல்ல, இனிப்புடன் கலந்த நஞ்சு அது.

“பிரபாகரனையும், பொட்டம்மானையும்  கொல்ல திட்டம் இட்டோம்”  என்பது தான் இங்கு ஒளிந் திருக்கிற விடயம். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் இத்தனை அழிவு வந்திருக்காது என்ற snappy   சொல்லை இணைத்துக் கொண்டார். தேசியத் தலைவரையும் பொட்டு அம்மானையும் கொன்றால் இயக்கம் அழியும்,போராட்டம் அழியும் என்ற திட்டத்தின் மூலம் தான் அது.

சொல்ஹெய்மின் பேட்டியை மீண்டும் வாசியுங்கள். இப்படி ஏராளமான snappy வரிகளுடாக உளவியல் போரை அவர் தொடுத்திருக்கின்றார்.

நோர்வே முன்வைத்த இந்த சரணடைவுத் திட்டம் 2009 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் முன்வைக்கப்படது. இது பற்றிய பேச்சு வார்த்தை கோலாலம்பூரில் நடைபெற்றது எனவும் இப்பேச்சுவார்ததையில் நோர்வே, மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியும் தானும் கலந்து கொண்டதாக உருத்திரகுமாரன் உறுத்திப் படுத்தியுள்ளார். இத்திட்டத்தை அமுல் படுத்த   கே.பி. மலேசியாவில் இருந்து நோர்வே செல்ல திட்டமிட்டார் என சொல்ஹெய்ம் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சொல்ஹெய்ம் சொல் வது உண்மையானால் நோர்வேயின் சரணடைவுத்திட்டத்தை வெளிநாட்டு தமிழ் செயற்பாட்டாளர்கள் சிலர் ஏற்றுக் கொண்டிருக்க்கிறார்கள் எனக் கருத இடமுண்டு. ஏற்கனவே இந்த நபர்கள் பற்றிய விபரங்கள் கசிந்துள்ள நிலையில், யார் இவர்கள் என்ற விபரத்தை உருத்திரகுமாரன் வெளியிடவேண்டும். குறித்த நபர்கள் இன்றும் மேற்கத்தைய அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறார்களா என்பது பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

2009 ஆண்டின் பிற்பகுதியில் கே.பி. சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படஆரம்பித்த  அதே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சில இணைய தளங்கள், அமைப்புகள் என்பன மேற்படி செயற்திட்டத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டதாக தெரியவருகிறது. இன்னமும் எரிக் சொல்ஹெய்ம் உடன் தொடர்புகளை பேணிவரும் சிலரே இந்த அமைப்பு, இணைய தளங்கள் ஆகியவற்றின் பின்னணியிலிருக்கிறார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் பின்னாலிருந்து இயக்கும் அரூபக் கரங்களும் இவர்களுடையதே.

எமது பக்க நியாயங்களை முன்வைக்க செல்லும் எமது பிரதிநிதிகள் எனப்படுவோர், தமது அரசியல் அறிவு , நுண்ணறிவு , பொது அறிவு ஆகியவற்றின் குறைபாடுகளாலும், காலனித்துவ எண்ணங்களில் இருந்து இன்னமும் விடுபடாதவர்களாகவும் இருப்பதால் சொல்லப் போன விடயத்தை  மறந்து , அதாவது சொல்லி விட்ட விடயத்தை, அதாவது மக்கள் வழங்கிய ஆணையை மறந்து நோர்வே அரசு  சொன்னதை விழுங்கிக் கொண்டு வந்து விடுவதாக தெரிகின்றது. அதனை செயல்படுத்த  இந்த மேற்குலக – நோர்வே – இந்திய சக்திகளின் எண்ணங் களுக்கு ஏற்ப மக்கள் மனங்களை மாற்ற வல்ல  `கருத்துருவாக்க சக்திகள் ‘  தாம் என்ற மனக் கனவுடன் மேடையேற்ற முனையும்   கருத்துவாக்க சதிகள் பற்றியே நான் விபரிக்க உள்ளேன் .விடயத்திற்கு நேரடியாகவே வருவோம். இங்கு சந்தேகத்திற்குரியவையாக கருதப்படும் நோர்வே கற்கை மையம், நாடுகடந்த அரசு, பொங்குதமிழ் இணையம், புதினப் பலகை இணையம், மறுஆய்வுஇணையம் ஆகிய ஐந்து விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

  1. நோர்வே தமிழ் கற்கை மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சர்வேந்திரா தர்மலிங்கம், நாடுகடந்த அரசின் அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆலோசகர். பொங்கு தமிழ் இணையத்தில் தாமரை காருண்யன் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
  2. புதினப்பலகை, பொங்குதமிழ் ஆகியவற்றின் நிர்வாகத்தில் ஒரு பொது நபர் இருக்கின்றார்  விபரங்களை இரண்டு இணைய தள முகவரிகளின் பதிவுகளை WHOIS தகவல்களிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
  3. மேற்படி இரண்டு இணையதளங்களில் பிரசுரிப்பவற்றையும் எழுத்துப் பிசகாமல் மறுபிரசுரம் செய்யும் அநாமதேய இணையதளம் `மறுஆய்வு’.

நோர்வேஜிய கற்கை மையத்தின் கருத்துப் பட்டறை  நோர்வே அரசின் மேம்பாட்டு நிதிய (Development fund) மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது என பொங்குதமிழ் இணையத்தில் செய்தி வருகிறது, அதே செய்தி இரண்டுநாள்  கழித்து புதினப்பலகை இணையத்தில் வருகின்றது. கருத்துப் பட்டறையில் சர்வேந்திரா தர்மலிங்கம் உரையாற்றுகின்றார். இரு இணையங்களும் உரையை கற்கை மைய ஆய்வு எனமுலாம்பூசி கலாநிதியின் அரசியல் பொருளாதார கருத்தாக காதில்  பூச் சுற்றுகின்றன.அதில் முக்கியமான கருத்து என்ன தெரியுமா?  `70 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசுமுன்னெடுத்துவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது தமிழ்மக்களினுடைய அரசியல் அடையளத்தை இழக்கச் செய்து, சமூக பொருளாதாரக்கட்டமைப்பினை பலவீனப்படுத்தி அழிக்கின்ற, `பெருந்தேசியவாதத்தின் மேலாண் மையினை விரிவாக்குதல்’ என்ற மூலோபாயத்தினை அடிப்படையாகக் கொண்டது.’ஆம் அவர்கள் சொல்வது , சிறீலங்காவில் இடம் பெறுவது இனப்படுகொலை எண்டு இல்லையாம்  `பெருந்தேசியவாதத்தின் மேலாண்மையினை விரிவாக்குதல்’   எண்ட விசயமாம்.நாம் அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேணுமாம் . அரசியல் சுதந்திரம் இன்றி கோவில் மதில்கூட கட்ட முடியாது இடையிலை புனித மரம் நாட்டப்படும். சுய நிர்ணய உரிமை சுதந்திரம் பேசாதீர்கள் எண்டு சொல்லுறதை சுத்தி வளைச்சு ஆக சொல்லுகினம். அவ்வளவு தான்.