தமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்

73

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

யுத்த காலங்களில் தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை ஒருங்கிணைத்து இயக்கிய ராஜபக்சே குடும்பம் இப்போது தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை சமூக முரண்பாட்டை கூர்மையாக்க நேர் எதிர் திசைகளில் நிறுத்தி இருக்கிறது

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் ஜிகாத் அமைப்புகளுக்கு துணையாக “ஒசாமா, சதாம், …” என்று ஒவ்வொரு முஸ்லீம் பகுதிகளிலும் “மதத்தின் பெயரால்” கும்பல்கள் உருவாக்கப்பட்டன. இதில் “ஒசாமா” எனும் கும்பலுக்கு, ஒட்டுக்குழுக்களான “ஈ.என்.டி.எல்,எப், கருணா” குழுக்களுடன் நெருங்கிச் செயல்பட்ட “பஷீர்” என்பவரே தலைமை தாங்கினார்.அதே போல வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை கருணா குழு தலைமையில் இலங்கை புலனாய்வு துறை 2005-2006 ஆம் ஆண்டு உருவாக்கி இராணுவம் “செய்ய முடியாத” குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் ஜிகாத் குழுக்கள் உருவாக்கப்பட்டன . குறிப்பாக நொக்ஸ் குழு, ஜெட்டி குழு ,ஒசாமா குழு என்பன திருகோணமலையில் இருந்து இயக்கப்பட்டன .

மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளில் மட்டும் 18 முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் இயக்கப்பட்டன. இந்த முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக கருணா குழுவே இருந்தது. மேலும் மாளிகாவத்தையில் இயங்கிய/இயங்குகிற பாதாள உலக கோஷ்டியின் ஆயுத முகவராகவும் கருணா குழு இருந்தது .இந்த குழுக்களுக்கு கோத்தபாயா ராஜபக்ச தலைமையிலான இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் அனுசரணை வழங்கினார்.

இன்றைக்கு கிழக்கில் கோத்தபாயா ராஜபக்ச அவர்களோடு சேர்ந்து இயங்கும் அதாவுல்லா அமைச்சராக இருந்த போது பண்டா குழு என்கிற பாதாள உலக கோஷ்டியுடன் சேர்ந்து இயங்கினார் .இந்த பாதாள உலக கோஷ்டிகள் கருணா மற்றும் ஒசாமா குழுக்களுக்கு இடையே ஆயுத பரிவர்த்தனை முகவர்களாக இருந்தார்கள் . அதாவுல்லா அவர்களின் அமைச்சரவை வாகனத்தில் கூட ஆயுதங்கள் கடத்தப்பட்டன வெலிகந்த இராணுவ முகாம் , கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் என பல இராணுவ முகாம்களில் இருந்து செயல்பட்ட கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களுக்கு முஸ்லீம் ஆயுத குழுக்களும் அடைக்கலம் வழங்கி வந்தன

ஆரம்பத்தில் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களுக்கு இலங்கை புலனாய்வு துறை மட்டுமே நிதி வசதிகளை வழங்கி வந்தது. பிற்காலத்தில் தமிழ் ஆயுத குழுக்கள் நிதி தேவைகளை ஈடு செய்ய கடத்தல்கள், கொலைகளை செய்ய கோத்தபாயா ராஜபக்சே அனுமதி வழங்கி இருந்தார். ஆனால் இருக்க முஸ்லீம் ஜிகாத் ஆயுத குழுக்கள் தங்களுடைய நிதி தேவைகளை பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளில் இயங்கும் ஜிகாத் அமைப்புகளில் இருந்து பெற்று கொண்டார்கள்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளிலும் ஆயுத வன்முறைச் சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்றன . இவ்வாறான தாக்குதல்களில் ஆயுதம் தரித்த சில கருணா /பிள்ளையான் குழுவினரும் முஸ்லிம் குழுவினரும் ஈடுபட்டிருப்பதாகப் பொலிஸ் தரப்பு விசாரணைகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சம்பவங்களின் பின்னணியில் இலங்கை ராணுவம் இருந்த காரணத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

கிழக்கு மாகாணத்தில் தனது இராணுவ நலன்களுக்காக இலங்கை அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்கள் மற்றும் இராணுவ புலனாய்வு துறைகளை பயன்படுத்தி வநதார்கள். ஒரு சம்பவத்தை மட்டும் சான்றாக இதற்க்கு சொல்ல முடியும். 1990ம் ஆண்டில் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களிடம் பரவலாகப் பேசப்பட்ட ஒரு பெயர் கப்டன் மொனாஸ்| ஆகும். இலங்கை இராணுவத்தில் 1990 ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவில் (Military Intelligence Corps) மட்டக்களப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக செயற்பட்ட கப்டன் மொனாஸ் மட்டக்களப்பில் இடம் பெறும் சுற்றிவளைப்புக்களின் போது இராணுவத்தினாரால் அழைத்துவரப்பட்ட மக்கள் முன்பு உரையாற்றும்போது, நான் ஒரு நல்ல முஸ்லிம். அல்லாவைத் தவிர வேறு எவருக்கும் நான் பயப்படமாட்டேன் என்று தவறாமல் தெரிவிப்பார்.ஆனால் இத்தனைக்கும் கப்டன் மொனாஸ் என்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். நீர்கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் பீரிஸ் மார்ட்டின் என்று பின்னாளிலேயே தெரியவந்தது.

இன்றைக்கு கிழக்கு மாகாணத்தில் 2000 பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கும் கோட்டாபய அரசாங்கம் தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை எதிர் திசைகளில் வைத்து கொண்டு தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி வருகிறது . கிழக்கு மாகாணத்தை சிங்கள மையப்படுத்தி தமிழ் தேசத்தை சிதைத்து விட இரு சமூகங்களும் மோத வேண்டும் என்பதே ராஜபக்சே குடும்பத்தின் இலக்காக இருக்கிறது.

இனமொன்றின் குரல்