வேலியே பயிரை மேயும் புது சட்டம் – EIA draft 2020

643

கடந்த மாதம் Assam ல உள்ள ஒரு oil tank ல இருந்து oil leak ஆகி தீ பிடிச்சு ஒரு ஊரையே அந்த இடத்த விட்டு evacuate பன்றாங்க. (வெளியேற்றுராங்க).

அதுக்கு முன்னாடி மாதம் விசாகப்பட்டினத்தில gas leak ஆகி பல பேரு ரோட்லயே மயக்கம் போட்டு விழறாங்க.

இந்த மாதிரி பல சம்பவங்கள் இந்தியால நடந்துட்டு தான் இருக்கு.

ஆனா இந்த மாதிரியான சம்பவங்கள் எதுவுமே இயற்கையால் நடந்த விபத்து அல்ல. மனித கோளாறுகளால் நேர்ந்த விபத்து தான்.

இதை தடுக்க தான் அரசு ஒரு வழிவகை செஞ்சது.

1984 ல போபால்ல உள்ள ஒரு பூச்சிகொல்லி ( pesticide) கம்பெனில இருந்து வந்த Methyl Isocyanate ன்ற விஷவாயு பல பேரோட உயிர குடிச்சது.

இது ஒரு தேசிய பேரிடராகவே ( National Disaster) அறிவிச்சாங்க.

இந்த விஷயத்தை ஒட்டி இது போல மேலும் தவறுகள் எதும் நடக்கக்கூடாது னு ஒரு சட்டம் அமைக்கிறாங்க.

அது தான் Environmental Protection Act, 1986.

இந்த Environmental Protection Act க்கு கீழ ஒரு சில rules and regulations போடுறாங்க.

அதுல ஒரு process க்கு பேரு தான் Environment Impact Assessment ( EIA)

இப்போ ஒரு இடத்தில பெரிய building கட்றதா இருக்கட்டும், ஒரு பெரிய industry அமைக்கிறதுக்கா இருக்கட்டும், ஒரு பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்கிறதுக்கா இருக்கட்டும், ரோடு போடுறதா இருக்கட்டும், Chemical plant ஆரமிக்கிறதா இருக்கட்டும்.

இப்படி எல்லா project க்கும் நாம environment clearance வாங்கனும்.

யாருகிட்ட ? Ministry of Environment கிட்ட வாங்கனும். ஆனா சும்மா environmental clearance கொடுப்பாங்களா பாஸ் னு கேட்டா…

இல்ல.

அந்த Environment clearance கொடுக்கிறதுக்கு முன்னாடி நம்ம industry ah அவங்க assess பன்னுவாங்க. அதாவது சோதனை செய்வாங்க.

நாம கட்ற ஒரு Industry சுற்றுபுறத்த மாசுபடுத்துதா.. அதுக்கு பக்கத்தில எதாச்சு கிராமம் இருக்கா.. அங்க மக்கள் எவ்ளோ பேரு வசிக்கிறாங்க. அங்க இருக்க மக்களுக்கு ஆபத்து நேர வாய்பிருக்கானு சோதனை பன்னி ஒரு report ready பன்னுவாங்க.

அதுக்கு பேரு தான் Environment Impact Assessment.

இதுல ஏதேனும் குறைபாடு இருந்தா, அத rectify ( சரி செய்த ) பின்பு தான் clearance கொடுப்பாங்க.

இப்ப நா ஒரு sterlite மாதிரி ஒரு factory கட்றேனு வச்சிப்போம். நா எப்படி clearance வாங்குவேன்.

1. Site selection ~ அதாவது எந்த இடத்தில factory கட்டபோறேன்.

2. அத பாத்துட்டு assess பன்னிட்டு என் factory இருக்க இடத்தில Environment Impact Assessment நடத்துவாங்க.

3. EIA நடத்தி முடிச்ச அப்றம் ஒரு NOC ( No Objection Certificate) certification தருவாங்க.

4. அதுக்கப்புறம் Public hearing நடத்துவாங்க.

அதாவது என் factoryய சுத்தி உள்ள மக்கள் கிட்ட கருத்து கணிப்பு நடத்துவாங்க. அவங்களோட Opinion கேப்பாங்க.

5. இது எல்லாத்தையும் சேத்தி ஒரு report ready பன்னிட்டு அத Expert Appraisal Committee க்கு அனுப்புவாங்க.

இந்த Expert Appraisal Committee ல Scientists & researchers எல்லாம் இருப்பாங்க. அவங்க ஒரு தடவ report ah பாத்துட்டு approve பன்னுவாங்க.

இவங்க எதாச்சு supplement measures சொல்லுவாங்க. அதாவது இப்போ நா ஒரு காட்ட வெட்டி அங்க ஒரு factory ஆரமிக்கிறேனா, அங்க வெட்டுன மரத்துக்கு பதிலா வேறு ஒரு இடத்தில 100 மரம் நட சொல்லி பராமறிக்க சொல்லுவாங்க.

இவங்க நம்ம report ல ஒரு கையெழுத்து போட்டோனே தான், நம்ம Project ah Ministry of Environment ல இருந்து approve செய்வாங்க.

சரி இது எல்லாம் நல்லா தானே இருக்கு. அப்றம் எப்படி விபத்து நிகழுதுனு ஒரு கேள்வி எழலாம்.

நம்ம 4 வதா Public hearing னு ஒன்னு பாத்தோம். அந்த Public எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஆளுங்கல செட் பன்னிட்டு அவங்க opinion ah வாங்குறாங்கனு ஒரு செய்தி இருக்கு.

இந்த சட்டம் சரியா இருந்தாலும் அதன் நடைமுறை சரியாக இல்லை. அதனால தான் இன்னமும் விபத்து நேர்ந்துட்டு வருது.

இத விட ஒரு Highlight ஆன விஷயம், நாம 2 மாசத்துக்கு முன்னாடி கேள்விபட்டோமே விசாகப்பட்டினத்தில gas leak ஆகி பல பேரு ரோட்ல மயக்கம் போட்டு விழுந்தது. அந்த Industry இன்னும் environment clearance வாங்கல….

இப்படி ஒரு சட்டம் நடைமுறைல பிரச்சினை இருந்தா என்ன செய்வாங்க?

அத amend பன்னுவாங்க. அதாவது அந்த சட்டத்தில சில திருத்தங்கள கொண்டு வருவாங்க.

அந்த சட்டதிருத்தத்த முதல ஒரு draft ah வரையறுப்பாங்க. அந்த draft அ Public opinion க்கு காட்டுவாங்க. அப்றம் அது நம்ம Parliament ல Bill ah propose பன்னுவாங்க. அப்றம் அத ஒரு Act ah கொண்டு வந்து நடைமுறைபடுத்துவாங்க.

இப்போ Environment Impact Assessment Draft, 2020 னு சொல்லி கடந்த March மாதம் ஒரு draft ah release பன்னாங்க.

அந்த draft இப்போ மக்கள் கருத்துக்கு வைக்கப்பட்டிருக்கு.

பொதுவா ஒரு சட்டத்தில் உள்ள ஓட்டைய அடைக்க தான் அத amend பன்னுவாங்க னு பாத்தோம். ஆனா இதுல நம்ம அரசு என்ன பன்னிருக்குனா… அந்த ஓட்டைய இன்னும் பெருசாக்கிவிட்டிருக்கு.

அதுல அவங்க பன்னிருக்கும் ஒரு சில விடயங்கள் உங்க பார்வைக்கு..

1. Post facto clearance

அதாவது environmental clearance இருந்தா தான் ஒரு industry eh ஆரமிக்க முடியும்னு சட்டம் இருந்துச்சு.

இப்போ யாரு வேணா industry ஆரமிச்சு அதுக்கப்புறம் clearance வாங்கிக்கோங்கனு சொல்றாங்க.

2. Strategic construction

பொதுவா ஒரு Military / army இருக்க இடத்தில ஒரு construction நடந்தா அத ரொம்ப disclose ah வச்சிருப்பாங்க.. வெளிய சொல்லமாட்டாங்க. இது ஒருவகைல நம்ம National security ah பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயம்.

ஆனா நா strategical construction பன்றேனு எந்த இடத்த வேணா எடுத்துக்கலாம். அதுக்கு EIA வாங்க தேவையில்ல னு இந்த draft ல propose பன்னிருக்காங்க.

3. Public hearing

முன்னாடி Public hearing கேக்குறதுக்கு 30 நாள் அவகாசம் இருந்துச்சு. இப்போ வெறும் 20 நாள். இப்போ உதாரணத்துக்கு ஒரு dam கட்றாங்க. அத கட்ட 6ல இருந்து 7 வருடம் ஆகும். ஆனா அத பத்தி மக்கள் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கிறதுக்கு வெறும் 20 நாள் அவகாசம் எப்படி பத்தும்?

இது போல இன்னும் நிறைய அந்த draft ல இருக்கு. அத Ministry of Environment, Government of India வோட official website ல வெளியிட்டிருக்காங்க.

இந்த draft பத்தி கருத்து தெரிவிக்க August 11 , 2020 வரை Supereme court deadline போட்ருக்காங்க.

இது குறித்த கருத்துக்களை நாம [email protected] என்ற மெயில் ஐடி க்கு அனுப்பலாம்.

இதோட விளைவு நமக்கு இப்போ தெரியாது. நாளைக்கு நம்ம ஊருலயே, ஏன் நம்ம வீட்டு பக்கத்திலேயே கூட ஒரு factory ஆரமிக்கலாம். இப்போ விட்டு அப்போ சொல்லி ஒரு பயனும் நடக்காது.

So.. இப்பவே அந்த draft ah படிச்சு பாத்துட்டு. எதெல்லாம் நீங்க இந்த draft ல மாத்தனும்னு நினைக்கிறிங்களோ. அதெயெல்லாம் தொகுத்து ஒரு Mail அனுப்புங்க.

வெள்ளம் வரும் முன்னே அனை போடுவது தான் சால சிறந்தது.

நன்றி🙏💕