அமெரிக்காவில் மூண்டது பெரும் போராட்டம்,கூட்டத்தை சுட்டு கட்டுபடுத்த உத்தரவு

76

கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க காவல்துறை கைதின் போது கழுத்தில் நெருக்கி கொல்லப்பட்டதுக்கு நீதி வேண்டி வெடித்த போராட்டம்,அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதுடன்,பெருமளவு மக்கள் காவல்துறைக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெருமளவு மக்கள் அமெரிக்கா முழுதும் கொதித்தெழுந்து போராட்டத்தில் நீதி வேண்டி ஈடுபட்டுள்ளனர்.வருடம் முழுவதும் அமெரிக்க காவல்துறையினரால் கொல்லப்படும் மக்கள் ஆயிரம் வரை சொல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மக்கள் போராட்டங்கள் மீது காவல்துறை தாக்குதல்கள் தொடுத்ததையடுத்து வன்முறையாக வடிவம் பெற்றுள்ளது.மக்கள் காவல்துறை மீது கடும் கோபத்தில் இருப்பதால் பொதுகட்டடங்கள்,கடைகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இது தொடர்பில் காட்டமான ட்வுட் போட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் ட்விட்டை,வன்முறையை தூண்டுவதாக ட்விட்டர் தடை செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

அமெரிக்க காவல்துறை அட்டகாசங்கள்

கொரானா நெருக்கடியில் ஒரு இலட்சத்தை தாண்டி இறப்பு எண்ணிக்கை கடந்துள்ள அமெரிக்காவில்,இப்போராட்டத்தில் மேலும் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதுடன்,அரசாங்கத்தின் ஆளுமையற்ற போக்கையும் காட்டுகின்றது.மற்றைய நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட தூண்டிவிட்டு,மக்கள் போராட்டத்தை மதிக்க கற்றுகொள்ளுங்கள் என்று பாடமெடுக்கும் அமெரிக்க அரசாங்கமும் அவற்றின் அல்லக்கைகளும்,அமெரிக்க மக்கள் போராட்டத்தின் போது மட்டும் வன்முறை தீர்வாகாது என்று அலறுவது ஏன் என்பதை உலக மக்கள் புரிந்து கொள்ளும் போதே,அமெரிக்க அரசின் எல்லைகடந்த போக்குக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும்.