அண்மைக்காலத்தில் புத்துக்குள்ளிருந்து ஈசல்கள் கிளம்புவது போன்று என்றுமில்லாதவாறு எமது ஆயுதப் போராட்டம் பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றியும் எதிர்மறையான பரப்புரைகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
வழமையான புலி எதிர்ப்பாளருடன் இணைந்து புதப்புது இணைய ஊடகங்கள், போலிமுகநூற்பதிவாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் மட்டுமன்றி இலக்கியப் பேச்சாளர்களும் தமிழ்ப் பேராசியரும் கூட இப்போது இதில் இணைந்துள்ளதைக் காணமுடியும். நடுநிலையாளர் போல் நடிக்கும் பத்தி எழுத்தாளர்கள்,இலக்கியப் பேச்சாளர்கள், தமிழ்ப் பேராசிரியர் போன்றோர் மிகச் சாதுரியமாக தமது எழுத்திலும் பேச்சிலும் புலிகள் பற்றிய அவதூறுகளைச் செருகுகிறார்கள்.
இது முன்னுரிமை அளிக்கப்பட்ட நிகழ்ச்சி
நிரலொன்றின் கீழ் கட்டமைக்கப்பட்ட இணைப்பு (link) களூடாக மிகநேர்த்தியாக முன்டெடுக்கப்படுவதாகவே தென்படுகிறது.
இதனால் இதில் சம்பந்தபட்ட தரப்புகள் சலுகைகள், நன்மைகள் சிலவற்றைப் பெறக்கூடும். ஆனால் எம்மினத்துக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.