யாழில் வாள் வெட்டு புள்ளீங்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி..

114

யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்-வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

N.G.T என்று உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றினாலேயே மேற்படி எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.அண்மைகாலங்களில் யாழில் எல்லைமீறும் வன்முறை கலாச்சாரங்கள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பதற்றத்தில் மத்தியில் வாழ்க்கையை கொண்டுசெல்வதுடன்,பொது இடங்களில் வாள் வெட்டுகுழுக்கள் மிக சுதந்திரமாக திரிவதுடன்,பெண்கள் மீதான சேட்டைகளிலும் ஈடுபடுகின்றமை குறிப்பிடதக்கது.பாதி ஜீன்ஸ்,பரட்டை தலைமுடி,காதில் கடுக்கன்,கண்ணை குற்றும் கலரில் ரிசேட்டுக்கள் என இவர்கள் அங்காங்கே ஒவ்வொரு கூட்டமாக தாங்களாக உருவாக்கப்பட்டு போகிற போக்கில் வன்முறைகளில் ஈடுபடுவதுடன்,தனிபட்ட தகராறுகளுக்கு பழிதீர்க்கும் கூலிபடைகளாகவும் செயற்படுகின்றனர்.

யாழில் உள்ள இளைஞர்கள்,தங்களின் சமூக நிலையங்களூடு ஒன்றிணைந்து,அடையாளம் காணப்பட்ட இவர்கள் மீதான சமூக நடவடிக்கைகளை எம்பாட்டில் மேற்கொள்வதன் மூலமே இவற்றை உரிய முறையில் கட்டுபடுத்தமுடியும்.அல்லாது போகிற போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டுதான்,இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகின்றது.உங்கள் ரோட்டில் தேவையில்லாம வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தாலே பிடித்து போட்டு பொளந்தால்,போதும்.அதே போல இவர்களின் ஒவ்வொரு சிறிய சமூக விரோத செயல்களிலேயே அடையாளம் கண்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் இந்த விஷ செடிகளை,இல்லாமல் இனியும் கடந்தால்,நாளை போதைபொருள் கடத்தல் கும்பல்,கட்டபஞ்சாயத்து கொலை கொள்ளை என்று ஒட்டு மொத்தமாக தேசத்தை மாற்றிவிடுவார்கள்.

[poll id=”5″]