ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் 20 கிலோ Ied வெடி பொருள் நிரப்பட்ட கார் ஒன்றை கைப்பற்றி வெடிக்க வைத்துள்ளதாக இந்திய இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.இதன் மூலம் நிகழவிருந்த பெரும் குண்டு தாக்குதல் ஒன்று தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் பலத்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.இதே வேளை புல்வாமாவில் கடந்த வருடம் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20க்கு மேற்பட்ட இந்திய படையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இதே வேளையில் முன்னதாக இந்தியாவில் நிகழும் அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக,false flag தாக்குதல்களை இந்திய அரசே மேற்கொண்டுவிட்டு மக்களை திசைதிருப்ப திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிருந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.