இன்று(26) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்வதற்காக முயற்சி செய்யும் பொழுது, வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் அவரைக் கண்டு, தற்கொலை செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தி, அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்தாக தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை வினவிய போது,
எனது வாயில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் காரணமாக உணவுகளை உண்பதற்கான நிலைமை கடினமாக உள்ளது. எனது குடும்பத்தாரும் என்னை கைவிட்டனர். இனியும் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.
குறித்த முதியவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்கவராவார். அதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் மட்டக்களப்பு பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த முதியவரை உடனடியாக அதிதீவிர அவசர பிரிவு வாகனம் ஒன்றை வரவைத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.