இருளில் மூழ்கிய இலங்கை – புதிய அரசுக்கு கெட்ட சகுனமா!

330

மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய புதிய குழுவொன்றை அமைக்க மின் சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கு இதுதொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை காலை கூடவுள்ளது. ஒரு வாரத்தில் இந்த மின் தடை ஏற்பட்டதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின் சக்தி அமைச்சர் கோரியுள்ளார்.

மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக செய்தி :
மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வீதி சமிக்ஞை விளக்குகள் செயல்படாததால் கொழும்பின் பல வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்,
மின் தடை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு நீர் விநியோகமும் தடை/குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை