
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதிக்குப் பின்னர் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கமானது ஒருபோதும் சுமந்திரனுடனோ அல்லது ரிஸாட் பதியூதீனுடனோ ஒப்பந்தங்களை செய்துகொள்ளாது என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுஜன முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடப் போகின்றீர்களா என்று என்னை நோக்கி இன்று கேள்வி கேக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்வில் லசந்த அலகியவன்னவுக்கான பிரசாரத்திற்கே வந்துள்ளேன் . தொலைபேசி அடிக்கும் என்று சிலர் கனவுகாண்கின்றனர். இன்னும் சிலர் மதம்பிடித்த யானை அடங்கும்வரை காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி ஆட்சியமைக்கப்போகின்ற அரசாங்கமானது 120 என்ற பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும். அந்த அரசாங்கமானது ஒருபோதும் சுமந்திரனுடன் ஒப்பந்தங்களை வைத்துக்கொள்ளாது. ஒருபோதும் ரிஸாட் பதியூதீனின் இனவாத சக்திகளுக்கும் அடிபணியாது. தனியாட்சியை நிரூபிப்போம்” என்று நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.